பெருமாளுக்காக ஒரு கோடி மதிப்பிலான வெள்ளி தேர்- எங்கு தெரியுமா?
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆலயம் அமைந்து உள்ளது. இக்கோயில் சுமார் 50 ஆண்டுகால பழமை வாய்ந்த கோயிலாகும். தற்பொழுது இந்த கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அதோடு இங்குள்ள பெருமாளுக்கு வெள்ளி தேர் செய்யும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. அந்த வெள்ளி தேருக்கு சுமார் ரூ 1.5 கோடிமதிப்பில் 115 கிலோ வெள்ளி இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது வெள்ளி தேரின் பணிகள் நிறைவடைந்து நித்யகல்யாணப் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள சந்திர தீர்த்தம் குளக்கரையில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருவதால் சுவாமிக்கு பதிலாக சுவாமி இடம் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பத்தை வைத்து வெள்ளோட்டம் விடப்பட்டது.
இதில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். சுமார் 115 கிலோ வெள்ளி கொண்டு அமைக்கப்பட்ட இத்தேரை 30க்கும் மேற்பட்ட ஊழியர்களால் வடிவமைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |