உங்களுடைய நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தடைபடுகிறதா? எளிய பரிகாரம் இதோ..

By Sakthi Raj Oct 15, 2026 11:59 AM GMT
Report

எல்லோருக்குமே சொந்த வீடுகளில் வசிக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். அந்த வகையில், ஒரு சிலருக்கு நிலம் இருந்தும் அதில் வீடு கட்ட முடியாத நிலைமை வருகிறது. அப்படியாக, சொந்த நிலம் இருந்தும் வீடு கட்ட முடியாத நிலை இருக்கிறது என்றால் அவர்கள் செய்யவேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே, நீண்ட நாட்கள் இடத்தில் வீடு கட்ட முடியாமல் இருக்கிறது என்றால் அதற்கு ஏதேனும் நிலத்தில் துஷ்ட சக்திகள், வாஸ்து தோஷம், கண்ணுக்கு தெரியாத தடைகள் இருக்கலாம். அப்படியாக, நீங்கள் இந்த பரிகாரத்தை பழமையான சிவன் கோவிலில் துவங்க வேண்டும்.

உங்களுடைய நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தடைபடுகிறதா? எளிய பரிகாரம் இதோ.. | Simple Remedies To Build Own House In Land

மூன்று கிலோ, 5 கிலோ அல்லது 10 கிலோ என உங்களுடைய விருப்பப்படியும் வசதிக்கு ஏற்ப நீங்கள் நவதானியம் வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த நவதானியத்தை கொண்டு பழமையான சிவன் ஆலயத்திற்கு சென்று சுவாமி அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறகு சிவன் திருமேனியில் பட்ட நவதானியத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு உங்கள் இடத்தில் தூவி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது அந்த நிலத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் அழிந்துவிடும். சில நாட்களில் தூவிய நவதானியம் முளைக்க ஆரம்பிக்கும்.

ஜோதிடம்: இந்த கிரக அமைப்பு உள்ளவருக்கு சிவப்பு நிறம் ஆகவே ஆகாதாம்

ஜோதிடம்: இந்த கிரக அமைப்பு உள்ளவருக்கு சிவப்பு நிறம் ஆகவே ஆகாதாம்

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் சிவன் கோவிலுக்கு சென்று நவதானியத்தால் அபிஷேகம் செய்து வாங்கி இரண்டாவது முறையும் அதன் நிலத்தை தூவி விட வேண்டும்.

இவ்வாறு செய்கின்ற பொழுது ஒரு நவதானியம் கூட நிலத்தில் முளைக்க வில்லை என்றால் அது நிலத்தில் கண்ணுக்கு தெரியாத துஷ்ட சக்திகள் அல்லது பிரச்சினைகள் எதாவது அந்த நிலத்தில் இருக்கலாம்.

உங்களுடைய நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தடைபடுகிறதா? எளிய பரிகாரம் இதோ.. | Simple Remedies To Build Own House In Land

மேலும், கோவில் குருக்களிடம் உங்களுடைய பிரச்சனையை சொல்லி இந்த நவதானியத்தை வாங்கி கொடுக்கலாம். கட்டாயம் அவர் சிவனுக்கு அபிஷேகம் செய்து கொடுப்பார். மேலும், இவ்வாறு பிரச்சனை இருப்பவர்கள் சிவபெருமானை அடிக்கடி தரிசனம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

"ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை பாராயணம் செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். இவ்வாறு செய்து வருகின்ற பொழுது விரைவில் வீடு கட்டக்கூடிய பாக்கியம் பெறலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US