வீட்டிலிருந்தே திருஷ்டி தோஷத்தை விரட்ட உதவும் எளிய பரிகாரம்

By Yashini Mar 19, 2024 05:58 AM GMT
Report

வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து செல்வார்கள்.

அதில் ஒரு சிலர் பொறாமை குணத்தோடு வீட்டிற்குள் வந்தால் அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் வந்துவிடும்.

அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும், பண விரயம் ஏற்படும், பொருட்கள் வைத்த இடம் தெரியாமல் போகும், சில பொருட்கள் உடைந்து போகும், கால்கள் இடறி காயங்கள் ஏற்படும். 

இதுபோன்ற பொறாமை எண்ணம் கொண்டவர்களின் திருஷ்டியை விரட்டியடிக்க இந்த எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம்.

வீட்டிலிருந்தே திருஷ்டி தோஷத்தை விரட்ட உதவும் எளிய பரிகாரம் | Simple Remedy Of Evil Eye Dosha

வீட்டில் உள்ளவர்களின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி, எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்.

இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள். 

வீட்டிற்கு வந்தவர்களுக்கு கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும்.

மேலும், இந்த சீரகம், கருப்பட்டி கலந்த பானகம் தயாரித்து அதனை அருகில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து சென்று அங்கு உள்ள பக்தர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கும் கொடுக்க, திருஷ்டி தோஷம் விலகும்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US