வாழ்க்கையில் செய்யவே கூடாத 42 வகை பாவங்கள்

By Sakthi Raj Aug 27, 2024 12:23 PM GMT
Report

வாழ்க்கையில் பிறருக்கு துன்பம் என்பது செய்யவே கூடாது.அப்படியாக வள்ளலார் அவர்கள் அடுத்தவர்களுக்கு 42 வகையான தீங்கு விளைவிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. தேவை இல்லாமல் வம்பாக வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்துவது.

4.நல்ல ஒற்றுமையான நண்பர்கள் இடையில் கலங்கம் உண்டாக செய்வது.

5. நம்பிய நட்பு துரோகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் மனதை வருந்தச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

திண்டுக்கல் ஊரில் நாம் பார்க்க தவறிய முக்கியமான ஆலயங்கள்

திண்டுக்கல் ஊரில் நாம் பார்க்க தவறிய முக்கியமான ஆலயங்கள்


10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. பொது வழியை மூடி அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

16. பசித்தோருக்கு உணவு அளிக்காமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானியரைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US