சிவனை வணங்கினால் காலம் நின்று விடுமா?
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவ பெருமானை வணங்கினால் காலம் நின்று விடும் என்கிறார்கள் அதை பற்றி பார்ப்போம்.
ஆம் எவர் ஒருவர் சிவனின் தியானத்தில் ஆழ்ந்து எம்பெருமானே என்று மூழ்குகிறார்களோ அவர்களது நொடி பொழுது நிறுத்தி வைக்க படுகிறது.
அவர்களை எமனும் நெருங்குவது இல்லை. அதாவது எவர் ஒருவர் சிவ தியானத்தில் இருக்கிறார்களோ அவர்களை நாம் தொந்தரவு செய்தல் கூடாது என்பது கட்டளை.
உதாரணமாக சுவாமி சன்னதி முன் பிராத்தனை செய்யும் பக்தர்களை சற்றும் கவனிக்காமல் தள்ளி நிற்கச்சொல்வது,விலகுங்கள் என்று சொல்லுவது கூப்பிட்டு எதாவது கேட்டல் போன்ற எந்த காரியமும் செய்தல் கூடாது.
அப்படி செய்வது அவர்கள் தியானத்தை கலைப்பதற்கு சமம்.அப்படி தியானம் கலைவதால் இறைவன் கோபத்திற்கு ஆளாகிறோம்.மேலும் பாவம் நம்மை சேர்கிறது.
சிவனை வணங்கினாலே பாவம் தீரும்.சிவாயநம என்று சொல்ல பிறவி பயன் அடைவோம்.ஆக சிவனை வழிபட அனைத்து துன்பம் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |