1000 ஆண்டு பழமையான 7 அடி அதிசய சிவலிங்கம்
தோண்ட தோண்ட சிவன் கிடைக்கிறார்.எங்கும் சிவன் எதிலும் சிவன் போல் சிவன் இன்றி வேறு இடம் இல்லை என்பதற்கு மறு சான்றாக சென்னிகுளம் வைத்தியநாதர் சிவலிங்க கோயில்.
அந்நியர்களின் ஆட்சின் போது ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டதால் பூஜைகள்நின்று போயின. மேலும் சில கோயில்கள் தரைமட்டமாயின.
அவற்றில் ஒன்று தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகில் உள்ள சென்னிகுளம் சிவன் கோவில். காகநதியில் அணை கட்ட ஆங்கிலேயர்களுக்கு கோவிலின் தூண்களை பயன்படுத்தினார்கள்.
இதனால் சென்னிகுளத்தில் சிவலிங்கமும் நந்தியும் மண்ணில் புதைந்து கிடந்தன. அதை சிவனடியார்கள் பிரதிஷ்டை செய்து புதியதாக கோயிலை எழுப்பினார்கள்.
இங்கு வந்து சித்தர் ஒருவர் சுவாமியின் பெயர் வைத்தியநாதன் என தெரிவித்துள்ளார் . கார்த்திகை பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பான பூஜை நடைபெறுகிறது.
மேலும் முருகப்பெருமானுக்கு பிடித்தமான காவடி சிந்து பாடிய அண்ணாமலை கவிராயர் சொந்த ஊர் சென்னி குளம் இந்த கோயிலுக்கு மிக அருகில் அமைந்து இருப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.இந்த கோயிலை பற்றிய முழு விவரங்களை மேலும் இந்த காணொளிகள் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |