சயன கோலத்தில் சிவ பெருமான் எங்கும் காணக்கிடைக்காத காட்சி
சிவ பெருமான் என்றாலே லிங்க வடிவம் தான் நம் நினைவிற்கு வரும்.அப்படியாக சிவ பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் சிவன் என்றாலே முதலில் சிவலிங்கம் தான் கண் முன்னாள் வந்து காட்சி கொடுப்பார்.
அதே பெருமாள் எடுத்து கொண்டால் நின்ற கோலம் சயன கோலத்தில் அவர் காட்சி கொடுத்தது நினைவிற்கு வரும்.பொதுவாக பெருமாளை தான் நாம் சயன கோலத்தில் தரிசனம் செய்து இருப்போம்.
ஆனால் இங்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் சிவ பெருமான் எங்கும் காணக்கிடைக்காத கோலமாக சயன கோலத்தில் காட்சி தருகிறார்.அதை பற்றி பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் என்னும் இடத்தில சிவபெருமான் பார்வதி தேவி மடியில் தலை வைத்திருப்பது போல சயன கோலத்தில் காட்சி தருகிறார்.அரிதான காட்சியாக சுவாமி அருள்பாலிக்கும் அந்த புராணம் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் சிவ பெருமான் இந்த அவதாரத்தின் பெயர் ஜூரஹரமூர்த்தி ஆகும்.இந்த சிவபெருமான் வடிவத்தை ஒரே கல்லால் செதுக்கினார்கள் என்பது ஆச்சரிய படக்கூடிய விஷயம். புராண கதைப்படி , வாசுகி பாம்பை கயிறாக திரித்து, மந்திர மலையை மத்தாக மாற்றி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர்.
அப்போது, வலி தாங்காத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. இதனால், ஆலகால விஷத்தில் இருந்து தங்களை காக்க வேண்டி தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர். பிற உயிர்களை காப்பதற்காக அந்த ஆலகால விஷத்தை சிவ பெருமானே விழுங்கினார்.
மிகக்கொடிய அந்த விஷம் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை (கழுத்தை புராணங்களில் கண்டம் என்றும் குறிப்பிடுவார்கள்) பிடிப்பார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்றுவிடும்.
இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டானது. இந்த நிகழ்வுக்கு பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்திற்கு சென்றனர். அப்போது, சிவ பெருமானுக்கு களைப்பு ஏற்பட. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள் .
அப்போது, சிவபெருமான் பார்வதி தேவி மடியில் தலை வைத்து படுத்து ( சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளியான இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது.
அதன் காரணமாகவே, சிவ பெருமான் இந்த கோயிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார் என்பது புராணம்.இங்கு பார்வதி தேவியும் சிவபெருமானும் தம்பதியராக காட்சி கொடுப்பதால் இங்கு இவர்களை வழிபட தீராத பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
நாமும் கண்டிப்பாக இந்த அரிதான கோலத்தை கண்டு மகிழிந்திட எம்பெருமானை ஆந்திராவில் சென்று தரிசித்து அருள் பெற்று வருவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |