ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று இதை செய்ய மறந்துடாதீங்க
ஐப்பசி மாதத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயங்களில் மிகவும் முக்கியமானதாக கந்த சஷ்டி விழாவும் ஈசனின் அன்னாபிஷேகமும் தான்.அப்படியாக சிவ பெருமானுக்கு தினம்தோறும் 16 வகையான பொருட்களால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றாலும், வருடத்திற்கு ஒருமுறை ஐப்பசி மாத பெளர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.
யார் ஒருவர் இந்த அன்னாபிஷேகம் பூஜையை பார்க்கிறார்களோ அவர்களுக்கு கோடி புண்ணியம் கிடைத்து பிறவி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15ம் தேதி வெளிக்கிழமை வருகிறது.
அன்றைய தினம் தான் ஐப்பசி மாதத்தின் இறுதி நாளும் கூட.அன்றைய தினம் அதிகாலை 03.53 மணி துவங்கி, நவம்பர் 16ம் தேதி அதிகாலை 03.42 வரை பெளர்ணமி திதி உள்ளது. அன்றைய தினம் அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய மூன்று நட்சத்திரங்களும் இணைந்து வருவது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் சிவ பெருமானின் லிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும். சில கோயில்களில் உச்சி கால வேளையிலும், சிவ ஆலயங்களில் மாலை நேரத்திலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும்.
இந்த அபிஷேகத்தை பார்ப்பது மிக மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.மேலும் அன்றைய தினம் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்ன பிரசாதத்தை சாப்பிட்டால் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகி சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் நாளில் அன்னாபிஷேகத்திற்கு சிவாலயங்களுக்கு அரிசி வாங்கிக் கொடுப்பது நமக்கு நன்மையை உண்டாக்கும்.இதனால் நம்முடைய வீட்டில் எப்போதும் உணவு தட்டுப்பாடு என்பது ஏற்படாது என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |