அஞ்சறைப்பெட்டியில் ஒளிந்து இருக்கும் ஆன்மீக ரகசியம்
வீட்டில் இரண்டு இடம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.ஒன்று நம்மை வழிநடத்தும் பூஜை அறை மற்றொன்று நம்முடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சமையல் அறை.அப்படியாக அந்த சமையல் அறையும் ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டது என்று பலருக்கும் தெரிவதில்லை.
நாம் இப்பொழுது சமையலறையில் அதிர்ஷ்டத்தை வழங்கும் ஆன்மீக குறிப்பு பற்றி தெரிந்து கொள்வோம். சமையலறை என்றால் கட்டாயம் எல்லோர் வீட்டிலும் அஞ்சறை பெட்டி இருக்கும்.அதில் நம்முடைய வசதிக்கு ஏற்ப அந்த அஞ்சறை பெட்டியில் சமையல் பொருட்களை வைத்திருப்போம்.
அஞ்சறை பெட்டியில் அதில் ஐந்து அறைகள் மட்டும் இருப்பதில்லை 7, 9 என்று வெவ்வேறு எண்ணிக்கையிலான அறைகள் கொண்டு இருக்கும். இந்த அஞ்சறைப்பெட்டியில் தாளிக்க தேவையான கடுகு, வெந்தயம், உளுந்து, கடலை பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு என்று சிலர் வைத்திருப்பார்கள்.
மற்றொரு சிலர் பட்டை, லவங்கம், கிராம்பு என்று மசாலா பொருட்களும் அடுக்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு நாம் தினமும் உணவிற்கு பயன்படுத்தும் அஞ்சறை பெட்டியில் நம்முடைய வசதிக்கு ஏற்ப சில பொருட்களை போட்டு வைத்தாலும் அதில் தெய்வ அம்சம் பொருந்திய ஏலக்காய் போட்டு வைப்பது சிறந்த பலனை கொடுக்கிறது.
பொதுவாக ஏலக்காய் புதன் பகவானுக்கு உரிய பச்சை நிறத்திலும், வாசனை மிகுந்த அம்சத்திலும் விளங்கும் ஒரு தெய்வீக மூலிகை பொருளாகும். மேலும் பணக்கஷ்டம் தீர இந்த ஏலக்காயை மகாலட்சுமிக்கு மாலை கோர்த்து சாற்றி வழிபட்டு வருபவர்களுக்கு பணக்கஷ்டம் வருவதில்லை.இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது.
இந்த ஏலக்காயில் இருக்கும் நறுமணமும், பச்சை நிறமும் ஒரு விதமான தெய்வீக சக்தியை கொடுக்கக்கூடியது. அதனால் அஞ்சறைப்பெட்டியில் தவறாமல் ஏலக்காய்க்கு என்று தனியாக ஒரு பெட்டியை ஒதுக்கி விடவேண்டும்.மேலும் அஞ்சறை பெட்டி காலி ஆகும் பொழுது புதன்கிழமை அன்று அதில் புதிய பொருட்களை நிரப்புவது உகந்தது ஆகும்.
அடுத்ததாக அஞ்சறை பெட்டியில் ஏலக்காய் உடன் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எப்போதும் போட்டு வைப்பதால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும்.அஞ்சறை பெட்டியை வடகிழக்கு அல்லது குபேர மூலையில் வைப்பது வாஸ்துபடி ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்கும்.
இந்த அஞ்சறை பெட்டியை புதன்கிழமை அன்று பூஜை செய்யும் பொழுது, பூஜை அறையில் திறந்த நிலையில் வைத்து, அதில் நிரம்ப பொருட்களை வைத்து பூஜையில் நெய் விளக்கு ஒன்றை ஏற்றி வழிபட வேண்டும்.
நம்முடைய முன்னோர்கள் பூஜைக்கு அறைக்கு நிகராக சமையலறையும் வழிபாடு செய்தனர்.நாமும் அவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் பொருளாதார நிலை மேம்பட்டு தடைகள் எல்லாம் விலகி வீட்டில் சந்தோசம் நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |