இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களிடம் எதிரிகள் தோற்றுவிடுவார்களாம்
நம்முடைய வாழ்க்கையில் நேரம் சரியில்லை என்றால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். அப்படியாக, ஒருவர் வாழ்க்கையில் எதிரிகள் இருக்கிறார்கள் என்றால் அந்த நபர் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் அல்லது உயர்ந்த இடத்திற்கு செல்ல போகிறார்கள் என்று அர்த்தம்.
இருப்பினும் எதிரிகள் நம்மை தாக்கினாலும் அவர்களை தோற்கடிக்க கூடிய வலிமை நம்முடைய மனதிலும் ஜாதக அமைப்பிலும் இருந்து விட்டால் நிச்சயம் எவராலும் நம்மை நெருங்க முடியாது. அப்படியாக எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களை எதிரிகளால் தோற்கடிக்கவே முடியாது என்று பார்ப்போம்.

அதாவது ஜாதகத்தில் சந்திரனுக்கு ஆறாம் இடத்தில் பாவ கிரகங்களான ராகு அல்லது கேது பகவான் அமைய பெற்றிருந்தால் அவர்களுக்கு எதிரியை ஜெயிக்க கூடிய வலிமையும் தைரியமும் பிறக்கும்.
அதாவது ஆறாம் வீடு மறைவு ஸ்தானம் என்பதால் அசுப கிரகங்களான ராகு கேது இங்கு அமரும்பொழுது போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய யோகமும், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய யோகமும், ஆன்மீகத்தில் அதிக ஆர்வம், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

இருப்பினும் ராகு 6-ல் இருந்தால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் கேது பகவான் ஆறாம் இடத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு பேச்சுத் திறமை அதிகரிக்கும்.
எதையும் வாதாடி ஜெயிக்க கூடிய தன்மை உண்டாகும். மக்களிடத்தில் நல்ல செல்வாக்கு பெற்று இருப்பார்கள். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டாகும்.தியானம் யோகா போன்றவற்றில் அவர்கள் பங்கு கொள்வார்கள். ஒரு சிலருக்கு 40 வயதிற்கு மேல் ஒரு மிகச் சிறந்த நல்ல பயன் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |