நம் மனதில் நினைத்தது நடக்க சிவன் மந்திரம்
சிவபெருமான் என்று சொன்னாலே மனதில் ஆனந்தம் தான். சிவனை நினைத்து உருகி கண்ணீர் சிந்தாத சிவ பக்தர்கள் இல்லை. சதா சிவா சிவா என்று மனதில் எம்பெருமானை நினைத்து உருகி கொண்டு இருப்பர்.
அப்படி இருக்க இந்த கலியுகத்தில் பல துன்பங்கள், இயற்கை மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.
இதில் இருந்து விடுபட சிவபெருமான் பனிமலர் பாதங்களை கட்டியாக பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
'நமசிவாய" எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை இடையிறாது தியானிக்க அவர் பரிபூரண அருள் கிடைக்கும்.
அதிலும் சிவ பெருமானின் எட்டு திருப்பெயர்களை சொல்லி வழிபட்டால் நாம் நினைத்து காரியம் நிறைவேறும் அந்த பெயர்கள்,
ஓம் பவாய
ஓம் சர்வாய
ஓம் ருத்ராய
ஓம் பசுபதயே
ஓம் உக்ராய
ஓம் மகா தேவாய
ஓம் பீமாய
ஓம் ஈசாயா
நாமும் இந்த சக்தி வாய்ந்த எட்டு மந்திரத்தை சொல்லி சிவ பெருமானின் அருள் பெற்று நினைத்த காரியத்தை முடித்து வாழ்வில் வெற்றி பெறுவோம்.