ஈசன் பார்வதியை "தன் காதலியே" என்று அழைத்த திருத்தலம்

By Yashini May 02, 2024 06:00 PM GMT
Report

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ள அருள்மிகு தங்காதலி சமேத ஸ்ரீ வாசீஸ்வரர் கோயில் உள்ளது. 

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஆதிசங்கரர் தமது கையால் கல்லில் வரைந்த ஸ்ரீசக்கரம் உள்ளது.

தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, ஈசனை மணமுடிக்க வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடமே இக்கோயில்.

ஈசன் பார்வதியை "தன் காதலியே" என்று அழைத்த திருத்தலம் | Sivan Parvathiyai Thankathaliye Endru Sonna Kovil

"தன் காதலியே, நான் வந்து விட்டேன்" என சிவபெருமான் கூறியதால் இக்கோயிலில் அருளும் அம்பிகை, "தங்காதலி" என அழைக்கப்படுகிறார். 

திருப்பதி வேங்கடாஜலபதி குபேரனிடம் வாங்கிய கடனைத் தீர்க்க இக்கோயிலில் அருளும் 11 கணபதியை வணங்கி வழிபட, அவரது கடன் தீர்ந்ததாக வரலாறு.

இந்தக் கோயிலில் ஐயாயிரம் வருடங்கள் பழைமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளேதான் சிவன் சுயம்புவாகத் தோன்றினார்.

ஈசன் பார்வதியை "தன் காதலியே" என்று அழைத்த திருத்தலம் | Sivan Parvathiyai Thankathaliye Endru Sonna Kovil    

மேலும், ஈசனை மூங்கில் புதரின் அடியில் இருந்து எடுக்க வாசி என்ற கோடரியை பயன்படுத்தியபோது, அது லிங்கத் திருமேயில் பட்டு இரத்தம் வழிந்தது. 

ஆதலால் இத்தல ஈசன் வாசீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அதோடு, இத்தல சிவலிங்கத்தை தொடாமல்தான் பூஜை செய்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.

ஈசன் பார்வதியை "தன் காதலியே" என்று அழைத்த திருத்தலம் | Sivan Parvathiyai Thankathaliye Endru Sonna Kovil  

ஆகவே, பிரதோஷத்தின்போதும் இதர உத்ஸவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். 

மேலும், இக்கோயிலில் அம்பாள் சிவனுக்கு வலப்புறம் இருந்து அருளுவதால் இது திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US