செய்யும் வினை அதே வடிவில் திரும்ப வரும்

By Sakthi Raj Apr 15, 2024 01:09 PM GMT
Report

நாம் ஒருவருக்கு செய்த வினை அதே வடிவில் திரும்ப நம்மை வந்து அடையும் என்பதை போதித்தது இந்து மதம், அதாவது வாழ்க்கை என்பது நம் முன் ஜென்ம கர்ம வினைகளை கழிப்பதே.

ஆனால் பிறப்பு இறப்பு என்ற அழகான பாடம் புரியாமல் அந்த நிமிடத்து அகங்காரம் ஆணவத்தால் தான் பாதி துன்பங்களும் பாவங்களையும் மனிதன் சேர்த்து கொண்டு இருக்கின்றான். எத்தனை முயற்சி செய்தும் அவர்களால் சில விஷயங்களை கட்டு படுத்த முடியாது.

செய்யும் வினை அதே வடிவில் திரும்ப வரும் | Sivan Perumal Indhu Matham

"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்" என்பார்கள்.ஒருவருக்கு தீமை என்பது செயலால் மட்டும் இல்லை மனதால் நினைத்தாலே பாவம் தான்.நாம் செய்யும் செயலுக்கும் சொல்லும் சொல்லுக்கும் கூட பதில் விடை இறைவன் கொடுத்து அனுப்புவான்.

இரவில் மட்டும் நடைதிறக்கும் சக்திவாய்ந்த கோயில்

இரவில் மட்டும் நடைதிறக்கும் சக்திவாய்ந்த கோயில்


இது அவன் கோட்டை.ஆகையால் மனிதனாக வாழ , தன்னை அறியாமல் சுற்றுபவனுக்கு சில கட்டுப்பாடுகள் தேவை.அப்பொழுது அவன் சென்று சேர வேண்டிய இடம் இறைவன்.

செய்யும் வினை அதே வடிவில் திரும்ப வரும் | Sivan Perumal Indhu Matham

எத்தனை தீயவனாக இருக்கட்டும் தினம் ஒருவன் அமைதியாக கோயிலுக்கு சென்று இறைவன் முகம் பார்த்து வணக்க ,அவன் மனம் இறைவன் முகம் போல் பிரகாசிக்க ஆரம்பிக்கும்,மனதில் உள்ள அழுக்குகள் எல்லாம் தானே மறைந்து போகும்.

ஒருவன் இறைவனை வழிபட தொடங்க அவன் பிறவி பயன் அறிவான்,ஞானம் பிறந்து முக்தி கிடைக்கும். செய்த தவறுகள் நினைத்து மனம் நொந்து போவான். அப்படி உணரும் பொழுது பாவவிமோச்சனம் கிடைக்கிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US