திருமண வாழ்வு சிறக்க சோமவார விரதம்

By Sakthi Raj Apr 11, 2024 11:49 AM GMT
Report

திருமணம் செய்து கொள்வதை விட,நடந்த திருமணத்தில் சிறப்பாக வாழ்வதே நலம் ஆகும். அப்படியாக திருமண வாழ்வு சிறக்க என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

"ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்"

என்னும் ஸ்லோகத்தால் சந்திரனை போற்றுகிறார் வியாசர்.

திருமண வாழ்வு சிறக்க சோமவார விரதம் | Sivan Somavara Viratham Thirumana Vazhkai

இதன் பொருள் தயிர்,சங்கு,பனித்துளிக்கு நிகராக வெள்ளை நிறம் கொண்ட சந்திரனே!! சகல நன்மையும் தரும் சிவபெருமானின் செந்நிற சடையில் இருப்பவனே. உன்னைத் தலை வணங்குகிறேன் என சந்திரனுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பை இந்த ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

இப்படியாக சிவனுக்கு உகந்த கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்த சந்திரன் அவரது தலையை அலங்கரிக்கும் பாக்கியத்தை அடைந்தார்.இதனால் சிவனுக்கு "பிறைசூடி" எனப் பெயர் வந்தது.

திருமண வாழ்வு சிறக்க சோமவார விரதம் | Sivan Somavara Viratham Thirumana Vazhkai

ஜோதிட சாஸ்திரப்படி தாயாரை குறிக்கும் கிரகம் சந்திரன்.தாயார் நலமுடன் வாழவும் அவரது உறவு பலப்படவும் இந்த விரதம் துணை செய்யும். ஜாதகத்தில் சந்திர திசை,புத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதம் மேற்கொள்வர்.

சிவத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் தம்பதியாக நீராடி சிவபெருமானை வழிபட்டால் அவர்கள் விருப்பங்கள் நிறைவேறும். மேலும்,அக்னி பிழம்பான சிவபெருமானை குளிர்விப்பதற்காக கோயில்களில் சங்காபிஷேகம் செய்கின்றனர்.

அப்போது 108 அல்லது 1008 வலம்புரி சங்குகளால் அபிஷேகம் நடக்கும். அதை தரிசிப்போருக்கு சகல வரங்களும் கிடைக்கும்.அவர்களுடைய மனோபலம் அதிகரிக்கும்.

திருமண வாழ்வு சிறக்க சோமவார விரதம் | Sivan Somavara Viratham Thirumana Vazhkai

மேலும்,ஒருவரது திருமண வைபவத்தில் மணமக்கள் அருந்ததியர் பார்க்கும் சடங்கு நடக்கும். கற்புக்கரசியான அருந்ததியை மகரிஷியான வசிஷ்டர் மனைவியாக அடைந்தது சோமவார விரதம் மகிமையால் தான்.இந்த விரதம் இருப்போருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மனதில் நினைத்ததை நடக்க செய்யும் சாய்பாபா வழிபாடு

மனதில் நினைத்ததை நடக்க செய்யும் சாய்பாபா வழிபாடு


சோமவார விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் அதன்பின் பகல் முழுவதும் உண்ணாமல் இருக்க வேண்டும்.அப்படி செய்ய திருமண வாழ்வு சிறக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US