நாம் மனதில் நினைத்தது நடக்க செய்ய வேண்டியவை
நம் அனைவ்ருக்கும் மனதில் நினைத்தது நடக்கவேண்டும் என்ற ஆசைகள் இருக்கும்.
நாம் என்னதான் அதற்கான முயற்சிகள் வேலைகள் செய்தாலும் சமயங்களில் காரிய தடைகள் மற்றும், நினைப்பது நடக்காமல் போவதுண்டு.
அந்த நேரங்களில் நாம் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துவிடுவோம்.
உண்மையில் நாம் மிகவும் வருந்தி இருக்கும் நேரத்தில் இறை வழிபாடு தாண்டி தீபம் ஏற்றி வழிபட்டால் மனதிற்கும் ஆறுதலாகவும் இருக்கும், நினைத்த காரியங்களும் நடக்கும். அப்படியாக, நம் மனதிற்கு பிடித்த எந்த கடவுளிடம் வேண்டினாலும் காரியம் கை கூடும்
ஆனால், அகிலத்தை காக்கும் ஈசன் சிவபெருமானுக்கு பஞ்ச தீபம் ஏற்றலாம்.
இதற்காக இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
இதனால் மன அமைதியும் காரியமும் விரைவில் கை கூடும். இதை நாம் சிவா பெருமான் கோயிலில் திங்கள் கிழமையில் மாலை நேரத்தில் ஏற்றி பிராத்தனை செய்து கொண்டால் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறி மன கவலைகள் அகலும்.