சிவபெருமானின் நட்சத்திரம்
By Yashini
பிறப்பே எடுக்காத சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை என்று கூறுகிறார்களே எப்படி தெரியுமா?
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர்.
வருடாந்திரம் மார்கழி மாதம் எல்லாம் சிவன் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் மிகச்சிறப்பாக நடைபெறும்.
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராண செய்திகள் உள்ளன.
சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள், இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் சிவபெருமானுக்கு களி படைக்கப் படுகிறது.
இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.