மரண கண்டம் விலக செய்யவேண்டிய பரிகாரம்
வாழ்தல் என்றால் பலரும் பல பதில்கள் சொல்லுவர். ஆனால் உயிரோடு இருந்தாலே வாழ்தல் தான். அதன் பிறகு தான் உழைப்பு, உயர்வு எல்லாம்.
ஆக வாழ்தல் இதில் இருக்கும் உயிர் தான் மிக முக்கியம். உயிர் அந்த உயிர்க்கு இருக்கும் ஒரே கண்டம் மரணம்.
அப்படி வாழ சிலருக்கு ஏற்படும் அந்த மரண பயம் இயல்பாக வரக்கூடும். இந்த பயத்தை போக்கி தைரியம் வழங்க ஆன்மீகமும் வழிபாடும் தான் உதவும்.
அப்படி சிலருடைய ஜாதகத்தில் மரண கண்டம் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய மரண பயம் நீங்கிட வழிபட வேண்டிய திருத்தலம் திருநீலக்குடி தீருநீலகண்டேஸ்வர் ஆவார்.
இது கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது. இங்கு இறைவனின் திருப்பெயர் திருநீலகண்டர் , மனோகஞ்சநாத சுவாமி, வில்வாரண்யேசுரர், பிரமநாயகர் நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், காமதேனுபுரீஸ்வரர் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
மேலும் இத்தலத்தில் இரண்டு அம்பாள் அருள்பலிக்கின்றனர். திருமண கோலத்தில் அம்பாளுக்கு அநுபமஸ்தனி, தவக்கோலத்தில் அம்பாளுக்கு பக்தாபீஷ்டதாயினி என்று பெயர்.
இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் மூலவருக்கு தைலாபிஷேகம். அதாவது திருநீலக்குடி நீலகண்டேஸ்வர் என்றாலே எண்ணெய் அபிஷேகம் தான் என்கின்ற அளவுக்கு அவ்வளவு பிரசித்த பெற்ற கோயில்.
இந்த அபிஷேக நேரத்தில் பாத்திரம் பாத்திரமாக எண்ணெய் எடுத்து சுவாமி மீது ஊற்றினாலும் அது அப்படியே சுவாமியின் மீது உவரி விடும். அதாவது சிவலிங்கம் மீது எண்ணெய் எல்லாம் உறிஞ்சி இறங்கிவிடுவது அதிசயமாக இருக்கும்.
இன்னொரு சிறப்பு என்னவென்றால் சுவாமிக்கு தைலாபிஷேகம் செய்து முடித்த பிறகு மறுநாள் சுவாமியை பார்த்தால் சுவாமிக்கு பல காலம் எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்யாதது போல் காட்சி தருவது தான்.
அடுத்தபடியாக , இத்தலத்தில் சித்திரை பெருவிழா சிறப்புடையது. இவ்விழாவின் 12 ஆம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழு ஊர்களுக்கு சென்று வருவது அற்புத காட்சியாகும். இந்த விழாவிற்கு ஒரு புராணம் இருக்கிறது.
அதாவது மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பி நாரதரிடம் கேட்க நாரதரும் மார்க்கண்டேயரை திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார்.
பின்பு நாரதர் சொன்னபடி ,மார்க்கண்டேயரும் இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமான எண்ணி தவம் செய்ய முடிவில் இறைவன் அவர் உன் தோன்றி மார்க்கண்டேயருக்கு என்ன வரம் வேண்டும் என்று சிவபெருமான் கேட்கிறார்.
அதற்கு மார்க்கண்டேயரும் தனது விருப்பத்தை சொன்னவுடன் அதன்படியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டது.
அதற்கு நன்றி கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இலந்துறை, ஏனாதிமங்கலம் திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ,திருநீலக்குடி ஆகிய ஏழு ஊர்களுக்கு மார்க்கண்டேயர் உற்சவம் மூர்த்தியாக எடுத்து சென்று வருகிறார். அந்த விழா சித்திரையில் இங்கு சிறப்பாக நடைபெறும்.
மரண கண்டம் பயம் போக செய்யவேண்டிய பரிகாரம்
மரணகண்டம் உடையவர் இத்தலத்திற்கு வந்து இறைவனை பாடு செய்து பின் எருமை,.திருநீலபட்டுத்துணி எள் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மரண பயம் எம பயம் நீங்கும்.
மேலும், ராகு தோஷம் உடையவர் உளுந்து, நிலவஸ்திரம் முதலியவற்றை இத்தலத்தில் தானம் செய்வதால் ராகு தோஷம் நிவர்த்தியாகிறது.
ஆகையால் சில சமயங்களில் நாம் சொல்வதுண்டு, விபத்தில் இல்லை உடல்நல குறைவால் மீண்டு வந்தவர்கள் நான் செத்து பிழைத்தேன் என்று அப்படி ஆனவர்களுக்கு மரணம் பயம் என்று இருக்கும்.
அவர்களும் மேலும் ஜாதகத்தில் மரண கண்டம் கெட்ட நேரம் என்று சொன்னால் இங்குள்ள சிவபெருமானை வழிபட பயம் விலகி, ஆயுள் பலம் அதிகரித்து தைரியம் பிறக்கும்.