நந்தியின் வாயிலிருந்து இரத்தம் வழியும் அதிசயம்

By Sakthi Raj Oct 13, 2024 09:52 AM GMT
Report

சிவன் கோயில்களில் கட்டாயம் நந்தி தேவர் இருப்பார்.அவரை தரிசித்து பின்பே நாம் வழிபாட்டை தொடங்குவோம்.அப்படியாக ஒவ்வொரு சிவன் கோயில்களில் இருக்கும் நந்திக்கு பின்னால் ஒவ்வொரு அதிசய கதைகள் இருந்தாலும் சிவகங்கை மாவட்டம் இலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் உள்ள நந்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைய பெற்று இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது இந்த 'இலங்குடி" என்ற கிராமம். பல ஆண்டு காலத்திற்கு முன்பாக இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது.

நந்தியின் வாயிலிருந்து இரத்தம் வழியும் அதிசயம் | Sivaperuman Nandhi Vazhipaadu

அது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாகவும் அதில் வரும் நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது.தொடர்நது 24 மணி நேரம் இந்த திரவம் வழிந்து கொண்டு இருக்கிறது.

உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்யலாமா?

உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்யலாமா?


தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தப்படியே உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.

நந்தியின் வாயிலிருந்து இரத்தம் வழியும் அதிசயம் | Sivaperuman Nandhi Vazhipaadu

இவ்வாறு வழியும் திரவியத்தை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தனர். அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் இரத்தம் போன்ற திரவம் வடிந்தபடியே தான் இருந்தது.

அந்த ஊர் மக்கள், சிலையின் திரவ சுரப்பையே தங்கள் கால கடிகாரமாக நம்பி விவசாயம் செய்வதாக கூறுகிறார்கள். சிலையில் திரவம் அதிகமாக சுரந்தால் அந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர்.

நாட்டில் எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியாமல் சற்று வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US