விட்டு சென்ற கணவனுக்காக பேய் உருவம் எடுத்த மனைவி

Lord Shiva
By Sakthi Raj May 06, 2024 06:39 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

 63 நாயன்மார்களில் பெண் நாயன்மார்களான காரைக்கால் அம்மையார் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அந்த அம்மையாரின் கதையை கேட்க கேட்க மனதில் சிவ பெருமானின் மீது அவர்கள் கொண்ட பக்தி அளவிட முடியாதது என்பது புரிந்து கொள்ள முடியும்.

காரைக்கால் மாவட்டத்தில் வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார்.சிறு வயதில் இருந்தே அம்மையாருக்கு சிவனின் மீது மிகுந்த பக்தி.

விட்டு சென்ற கணவனுக்காக பேய் உருவம் எடுத்த மனைவி | Sivapuranam Karaikalammaiyar 63 Nayanmargal Sivan

பக்தியின் வெளிப்பாடு அம்மையாரின்n புற தோற்றத்தில் ,அழகாய் தெரியும்.பார்க்கவே இறை அருள் பெற்ற குழந்தையாக இருப்பார்கள்.இவரை, காரைக்காலை அடுத்த நாகைப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர்.

ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வர ஒரு நாள் அம்மையாரின் கணவன் நண்பன் ஒருவர் வணிகம் செய்யும் இடத்தில அவர்கள் தோட்டத்தில் மாங்கனி இரண்டு காய்த்திருக்கிறது .நல்ல சுவையாக இருக்கும் என்று கொடுக்க அதை கொண்டு அம்மையாரிடம் கொடுத்தார்.

சிவா பெருமானுக்கு தன் பக்தர்களை சோதிப்பது தான் மிகவும் பிடித்தமானது ஆயிற்றே.அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு அம்மையார் வீட்டிற்கு சிவனடியார் வேடத்தில் உணவு வேண்டி வந்தார்.

விட்டு சென்ற கணவனுக்காக பேய் உருவம் எடுத்த மனைவி | Sivapuranam Karaikalammaiyar 63 Nayanmargal Sivan

அவரை வரவேற்று வீட்டில் சமைத்து வைத்த சாதத்தில் தயிர் கலந்து அதனுடன் தன் கணவர் கொடுத்த மாங்கனியும் கொடுக்கிறார்.

அதை சாப்பிட்டு சிவ பெருமான் கிளம்பி விடுகிறார். பின்பு மதியம் அம்மையாரின் கணவன் உணவு சாப்பிட வர அம்மையார் உணவுடன் அவர் வாங்கி வந்த மாம்பழத்தையும் கொடுக்கிறார்.அதை சாப்பிட அவர் பழம் சுவையாக இருக்கிறதே இன்னொருபழம் இருக்கிறது அல்லவா? அதையும் எடுத்து வா என்று சொல்ல.

அம்மையாருக்கு வேர்த்து போனது.பெருமானே நான் சிவன் அடியாருக்கு கொடுத்து விட்டேனே இப்பொழுது ஆசையாக என் கணவர் கேட்கிறார் என்ன செய்வது என்று பெருமானை வேண்டி நீதான் அருள் புரிய வேண்டும் என வருந்தி கேட்க அம்மையாரின் கையில் ஒரு மாங்கனி வந்தது.

என்ன அதிசயம் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆசையாக காத்திருக்கும் தன் கணவனுக்கு இந்த மாம்பழம் கொண்டு கொடுக்க அவரோ இது என்ன மாம்பழம் முன்பை விட இன்னும் சுவை அதிகமா இருக்கிறதே இரண்டும் வெவ்வேறு சுவையாக இருக்க வாய்ப்பில்லையே என்று சந்தேக பட, அம்மையார் நடந்த உண்மையை கூறினார்.

விட்டு சென்ற கணவனுக்காக பேய் உருவம் எடுத்த மனைவி | Sivapuranam Karaikalammaiyar 63 Nayanmargal Sivan

அவரோ நம்பவில்லை.அது எப்படி என்று ஆச்சிரியமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்க? சரி நான் நம்ப வேண்டும் என்றால் மீண்டும் ஒரு கனி இதே போல் கொண்டு வா என்று சொல்ல அம்மையார் இறைவனை நினைத்து வேண்ட மீண்டும் ஒரு கனி வந்தது.அதிர்ந்து போயிட்டார் அம்மையாரின் கணவர்.

நீ மனித பிறவி அல்ல தெய்வ பிறவி என்று சொல்லி உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார்.அம்மையார் வாணிபம் சென்ற தன் கணவன் வருவார் என்று காத்து கொண்டு இருந்தார்.

ஆனால் பல வருடங்கள் ஆகியும் அம்மையாரின் கணவன் வரவில்லை.பரமதத்தர் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க அந்த குழந்தைக்கு அம்மையாரின பெயரையே வைக்கிறார்.

ஒரு நாள் தான் கணவன் இருக்கும் இடம்அறிந்து தன் தந்தையுடன் கணவன் இருக்கும் இடத்திற்கு அம்மையார் செல்கின்றார்.

விட்டு சென்ற கணவனுக்காக பேய் உருவம் எடுத்த மனைவி | Sivapuranam Karaikalammaiyar 63 Nayanmargal Sivan

அங்கு செல்ல அதிர்ச்சி தன் கணவன் வேறு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று அம்மையார் மிகவும், மனம் வருந்தி ஈசனே என் கணவருடன் வாழாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் என் கணவருக்கு இல்லாத இந்த அழுகு மேனியும் வேண்டாம் .என் கணவனுக்கு இல்லாதஉருவமும் வேண்டாம் வேற யாரும் என் அழகை பார்க்க கூடாது எனக்கு பேய் உறவும் தரிக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்ட ஈசனும் அவ்வாறே செய்தார் .

பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US