Solar Eclipse 2024: முழு சூரிய கிரகணம் - எப்போது பார்க்கலாம்? முழுமையான தகவல்கள்
ஏப்ரல் 8ம் திகதியான இன்று 2024ம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும், இது சூரியனை முழுமையாக அல்லது ஓரளவு மறைக்கிறது.
இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது, வானம் விடியற்காலை அல்லது மாலை நேரம் போன்று இருண்டு விடும்.
வடஅமெரிக்காவை கடந்து மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவை இந்த கிரகணம் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும்.
பாதுகாப்பு உபகரணங்களுடன் சூரிய கிரகணத்தை பார்க்கலாம், நேரடியாக சூரியனை பார்ப்பது பாதுகாப்பானது அல்லது.
கடுமையான கண் பாதிப்பு அல்லது பார்வை பறிபோகும் தன்மை கூட நிகழலாம், பாதுகாப்பான சிறப்பு கண்ணாடிகளை பயன்படுத்தவும்.
இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 39 நிமிடங்கள் ஆகும்.
என்ன செய்யக்கூடாது?
கிரகண காலத்தில் உணவு, தண்ணீரை உட்கொள்ளக்கூடாது, இதனால் செரிமானம் பலவீனமடைந்து நோய்வாய்ப்படலாம்.
கிரகணத்திற்கு முன்பாக உங்களது உணவு முடித்துக்கொள்ளுங்கள் அல்லது கிரகணம் முடிந்த பின்னர் சாப்பிடலாம்.
கிரகண நேரத்தின் போது சமைப்பதையும் தவிர்த்துவிட வேண்டும், கட்டாயமான பட்சத்தில் குறைந்த தீயில் சமைத்துக் கொள்ளலாம்.
அந்நேரத்தில் தூங்குவதும் கூடாது, சுபகாரியங்களையும் நடத்தக்கூடாது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது போன்ற காரியங்களையும் செய்யக்கூடாது.
கிரகண நேரத்தில் இயற்கையுடன் ஒன்றிணைந்த காரியங்களில் ஈடுபடவேண்டும்.
கிரகணம் முடிந்த பின்னர் எதிர்மறை ஆற்றலை அகற்ற குளித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.