54 ஆண்டுகளுக்கு பின் அரிய நிகழ்வு: சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிகள்
2024ம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது, இதனால் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 39 நிமிடங்கள் ஆகும்.
தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும்.
முதல் சூரிய கிரகணம் மீன ராசியில் நிகழவிருப்பதால், கவனமுடன் இருப்பது நல்லது, உடல்நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.
மேஷம்
முதல் சூரிய கிரகணத்தால் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம், உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், இந்த நாளில் மறந்தும் கூட எந்தவொரு முதலீட்டையும் செய்ய வேண்டாம், வியாபாரத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் கஷ்டமான சூழல் நிலவும், பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும், வீண் செலவுகள் அதிகரிப்பதால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவீர்கள், நிதிநிலையில் கவனம் செலுத்திடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் வரலாம், பணக்கஷ்டம் இருக்கும், மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேசவும், சவால்களை சந்திக்க நேரிடலாம், உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு உண்டாகலாம், புதிதாக தொழில் தொடங்கவோ அல்லது வேலையை மாற்றவோ நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை விட்டுவிடுவது நல்லது, இது சரியான நேரம் இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி இழப்புகள் உண்டாகும் அபாயம் உள்ளது, கிரகணத்தின் தாக்கத்தால் வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவு இல்லாமல் போகும், நஷ்டத்தை சந்திக்கலாம், கவனமுடன் செயல்படுங்கள், மன உளைச்சல் அதிகரிக்கும்.
தனுசு
கிரகண நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்காது, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், தீங்கு ஏற்படலாம், எதிலும் முதலீடு செய்ய வேண்டாம், இது அதற்கான நேரம் இல்லை, மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை, நிதானமுடன் இருக்கவும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.