சூரிய கிரகணத்தின் போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம்
ஜோதிட சாஸ்திரங்களின் படி, கிரகணத்தின் போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
சூரிய பகவான் தான் நவகிரகங்களின் தலைவான விளங்கக் கூடியவர். ஆரோக்கியம், தலைமை பதவி, ஆட்சி, அதிகாரம், தந்தை, தந்தை வழி உறவுகள், ஒரு மனிதனின் செயல்பாடு, ஆற்றல் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக இருக்கிறார்.
இவரை பாவ கிரகங்களில் ஒன்றான ராகு விழுங்குவதாலேயே கிரகணம் ஏற்படுவதாக புராண கதைகள் சொல்கின்றன.
இதனால் உடல் ரீதியாகவும் ஜாதக ரீதியாகவும் மனிதர்களிடம் பலவிதமான பாதிப்புகள் கிரகண காலத்தில் ஏற்படும் என நம்பப்படுகிறது.
மேலும் சூரிய கிரகணம் காலத்தில் தீயசக்திகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என்பதால் நாம் அந்த வேளைகளில் எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம்.
அப்படி சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் நாளில் மனம் பதட்டம் கொள்ளாமல் நாம் இந்த மந்திரங்கள் சொல்லி வர கிரகணத்தின் பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.
1. நமஹ ஸூர்யாய சாந்தாய ஸ்வரோகாய நிவாரிணே, ஆயுராரோக்ய மைஸ்வைரியம் தேஹி தேவ் ஜகத்பதே
2. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரெளம் ஸஹ ஸூர்யாய நமஹ
3. பாஸ்கராய வித்மஹே மஹாதுத்யாதிகரா தீமஹி
தன்னோ ஸூர்ய பிரச்சோதயாத்
4. ஆதித்யாய வித்மஹே மார்தாண்டாய தீமஹி
தன்னோ ஸூர்ய பிரச்சோதயாத்
5. ஓம் சப்த துரங்காய வித்மஹே
ஸஹஸ்ர கிர்ணய் தீமஹி
துன்னோ ரவி பிரச்சோதயாத்
6.ஆதித்ய ஹ்ருதய புண்யம் ஸர்வ ஸத்ரு விநாஸனம்
ஜயவாஹம் ஜபேநித்யம் அக்ஷயம் பரமம் ஸிவம்
7. ஓம் ஆதித்யா நமஹ
8. ஓம் மித்ரா நமஹ
ஓம் ரவியே நமஹ
ஓம் சூர்யாய நமஹ
ஓம் புனவே நமஹ
ஓம் ககாய நமஹ
ஓம் புஷ்னே நமஹ
ஓம் ஹிரண்யகர்பாய நமஹ
ஓம் மாரிசயே நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் சவித்ரே நமஹ
ஓம் அர்காய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ
9. சத்ரு நாசாய ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் சூர்யாய நமஹ
10. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சூரிய கிரகண வேளையில் மனம் குழப்பம் கொள்ளாமல் இந்த மந்திரிங்கள் உச்சரித்து நம்மை பாதுகாத்து கொள்வோம்