தஞ்சை பெரியகோவில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சித்திரை மாதம் இரண்டாம் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகம் முடிந்ததும் அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
பிரதோஷம் அன்று நந்தியம் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும், தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கையால் ஏராளமான பக்தர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர்.
பொதுவாக பிரதோஷ நேரத்தில் கோவிலில் சொல்லப்படும் வேத மந்திரங்கள், சிவ நாமங்களை கேட்பதால் கர்ம வினைகள், பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும்.
பிரதோஷத்தன்று நந்திக்கு வில்வம், அருகம்புல் மாலை ஆகியவை வாங்கி தருவதால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து விதமான தொல்லைகளில் இருந்தும் விடுபட வழி பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |