பூஜையறையில் கண்ணாடி எதற்கு? கெவுளி சத்தம் நல்லதா
கண்ணாடியை பூஜை அறையில் வைப்பதன் மூலம் என்ன பலன்கள் தெரியுமா?
பூஜை அறையில் கண்ணாடி
பூஜையறையில் பல்லிகள் இருப்பது, கண்ணாடி வைப்பது குறித்து பல தகவல்களை நம் முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ளனர்.
அதன்படி, பழைய விளக்குகள் உடைந்து விட்டாலோ அல்லது விளக்குகளில் ஏதாவது சேதாரம் ஏற்பட்டிருந்தாலோ, அதுபோன்ற விளக்குகளை நாம் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தாத எந்த பொருளையுமே பூஜையறையில் வைக்ககூடாது என்கிறார்கள்.
பூஜை பொருட்களும், பூஜை செய்வதற்கு முந்தைய நாளே சுத்தம் செய்துவிட வேண்டும். பூஜை அறையில் சுவாமி படங்கள், முன்னோர்கள் படங்களை வைத்தும் வழிபாடு செய்வதைபோல, கண்ணாடியை வைக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில், குலதெய்வமும் முன்னோர்களும், மறைமுக தெய்வங்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பதாக சொல்வார்கள்.
பல்லி சத்தம்
மேலும் இது நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் அதிகரித்து அதிர்ஷ்டத்தை பெருக்கி தரும். அதேபோல், பூஜையறையில் பல்லிகள் தென்பட்டால் அது மிகவும் மங்களகரமானது. நிதி நிலைமை சீராகி, விரைவில் செல்வம் பெருகும். பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமமாகும்.
ஏதாவது முடிவுகளை எடுக்க தடுமாறினால், அல்லது கெட்டதை சிந்திக்கும்போதும், பல்லி சத்தம் கேட்கும். உடனே, மனதில் உள்ள குழப்பம், தடுமாற்றம் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
இதில் பல்லி சத்தம் கேட்காமல் இருந்தால், சாம்பிராணி தூபம் போட்டு, 5 வெள்ளிக்கிழமைகளில் வீடு முழுவதும் காட்ட வேண்டும். இதன்மூலம், முன்னோர்களின் ஆசிர்வாதம் தொடர்ந்து கிடைத்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.