தோசைக்குள் மறைந்திருக்கும் ஆன்மிக அதிசயம்.., என்ன தெரியுமா?
மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள்.
பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் பெருமாளுக்கு மிளகு தோசையை பித்தளை பானைகளில் வைத்து படைக்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் கோவிலில் பச்சரிசி, கருப்பு உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து, தோசை நெய்யில் வார்க்கப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்படுகிறது.
இந்நிலையில், தினமும் சாப்பிடுகின்ற தோசை மாவுக்குப் பயன்படுத்துகின்ற பொருட்களில் நவகிரக குணங்கள் அடங்கியுள்ளன.
என்னென்ன தெரியுமா?
தோசை சுட பயன்படும் அக்னி சூரியபகவான்.
மாவில் முக்கியபங்கான அரிசியில் சந்திர பகவானும் உளுந்தில் சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் உள்ளனர்.
வெந்தயத்தில் புத்தியை சுத்திகரிக்கும் புதன் பகவானும் உள்ளனர்.
தோசைக்கல் இரும்பில் சனி பகவானும் உள்ளனர்.
தோசையின் நிறத்தில் செவ்வாய் பகவானும் உள்ளனர்.
தோசையை சாப்பிடும் ஆண்களில் குரு பகவானும், பெண்களில் சுக்ர பகவானும் உள்ளனர்.
தோசையின் வட்ட வடிவு இந்த பிரபஞ்சத்தையே குறிக்கிறது.
தோசையை கடிகார வடிவில் சுற்றுவது இந்த உலகம் சுற்றுவதை குறிக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |