கண் திருஷ்டி விலக கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்
நம்முடைய வீடுகளில் கண் திருஷ்டி என்பது எப்பொழுது எந்த நேரத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது. மேலும், நெருங்கியவர்களால் கண் திருஷ்டி பாதிப்பு வருகிறதா? அல்லது வேறு ஒரு நபரால் வருகிறதா என்பதையும் நாம் கணிக்க முடியாது.
இருப்பினும் நம்முடைய வீடுகளில் அதற்கான ஒரு நடவடிக்கைகளை முன்னதாக எடுத்துக் கொள்கின்ற பொழுது நல்ல பலன்களை பெறலாம். அந்த வகையில், நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக ரகசியங்களை பற்றி பார்ப்போம்.

விநாயகப் பெருமானின் அம்சமாக கருதக்கூடிய வெள்ளெருக்கு வேர் வீடுகளில் வைக்கின்ற பொழுது கண் திருஷ்டிகள் மற்றும் செய்வினை போன்ற பாதிப்புகள் நம்மை நெருங்குவதில்லை.
அதே போல், வீடுகளில் கருப்பு குன்றி மணி வைக்கும் பொழுது எதிரிகள் தொல்லை முற்றிலுமாக விலகுகிறது.

அவர்களால் பிரச்சனைகள் வருவதில்லை. வீடுகளில் சாம்பிராணி மற்றும் வெண் கடுகு தூபம் போடும் பொழுது வீடுகளில் இருக்கக்கூடிய தீய சக்திகள் முற்றிலுமாக விலகுகிறது.
அதேபோல், வீடுகளில் வலம்புரி சங்கு வைப்பதால் குபேரனுடைய முழு ஆசிர்வாதத்தையும் நாம் பெறலாம். வீடுகளில் இருக்கக்கூடிய பணப்பெட்டிக்குள் மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடித்து வைக்கின்ற பொழுது செல்வ செழிப்பு உண்டாகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |