வீட்டில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில ஆன்மீக குறிப்புகள்

By Fathima Apr 06, 2024 10:30 PM GMT
Report

தினசரி வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்,

* அதிகாலை எழுந்ததும் கோலமிடும் போது வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் வேண்டும், தெற்கே பார்த்து நின்று கோலமிடக்கூடாது.

* நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுத்தால் வாசலுக்கு வெளியே நின்று கொடுக்கக்கூடாது, வாசலுக்கு உள்ளே வந்து கொடுக்க வேண்டும்.

* தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்று முறை வலம்வர வேண்டும்.

* வீட்டில் கெட்ட விடயங்கள் பற்றியோ, கெட்ட வார்த்தைகளோ பயன்படுத்த வேண்டும், இது எதிர்மறை ஆற்றலை அதிகரித்துவிடும்.

வீட்டில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில ஆன்மீக குறிப்புகள் | Spiritual Tips To Follow

* செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றுதல் கூடுதல் சிறப்பு.

* திருமணமான பெண்கள் கிழக்கு திசையை நோக்கி இரண்டு புருவ மத்தியிலும், உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ள வேண்டும்.

* இதேபோன்று ஒரு விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், இரண்டு மூன்று விரல்களில் அணியக்கூடாது.

* இல்லை என்ற வார்த்தைகளை உபயோகிக்காமல், தேவை இருக்கிறது, வாங்கிவிடலாம் என்ற நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தவும்.

* காலையில் எழுந்தவுடன் உள்ளங்கை, பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படத்தை பார்த்தல் நல்லது.

* விளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊனமுற்றவர்களுக்கு, ஏழைகளுக்கு உங்களால் இயன்றளவு உதவி செய்திடுங்கள்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US