நரகத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ ராமானுஜர் அவர்கள் திருக்கோட்டியூர் நம்பி அவர்களிடம் மந்திர உபதேசம் பெறவேண்டும் என்று மிகவும் ஆவலோடு இருந்தார். அதற்காக திருவரங்கத்தில் இருந்து கிளம்பிய அவர், நெடுந்தூரம் நடக்க தொடங்கினார்.
மதுரையைத் தாண்டி இருந்த திருக்கோட்டியூரை ஊரை அடைந்தார். அங்கு அவர் நம்பி அவர்கள் சந்தித்து அவர் திருவடிகளில் விழுந்து பணிவாக வணங்கினார். பிறகு அவர் நம்பியிடம் சுவாமி தாங்கள் எனக்கு மந்திர உபாதேசம் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
ஆனால், நம்பி ஸ்ரீ ராமானுஜருக்கு மிக எளிதில் மந்திர உபதேசம் செய்து கொடுப்பதாக ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு வா! பிறகு வா! என்று அவரை திருப்பி திருப்பி அனுப்பி வைத்தார். இருந்தாலும் ஸ்ரீ ராமானுஜர் நம்பி அவர்களிடம் மந்திர உபதேசம் பெற்று ஆகவேண்டும் என்று சோர்வு அடையாமல் மீண்டும் மீண்டும் நம்பி அவர்களை தேடி வந்தார்.
ஸ்ரீ ராமானுஜரின் இடைவிடாது இந்த முயற்சி நம்பி மனதை இளகச்செய்தது. பிறகு நம்பி அவர்கள் ஸ்ரீ ராமானுஜரை அவர் பக்கம் அழைத்து, எட்டெழுத்து மகா மந்திரத்தை அவர் செவிகளில் உபதேசித்தார். அதோடு சேர்த்து நம்பி அவர்கள் ஸ்ரீ ராமானுஜரிடம் இந்த மந்திரம் மிகவும் வலிமையான மந்திரம்.
இந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னால் எல்லா பாவங்களும், விலகி விடும். மேலும் இந்த மந்திரத்தை மிகவும் ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றார். அப்படியாக, இந்த மந்திரத்தை ஒருவருக்கு சொல்லவேண்டும் என்று விரும்பினால் அவர்களை சோதனை செய்து, அதற்கு தகுதியானவர்களுக்கு இந்த மந்திரத்தை ரகசியமாக சொல்லவேண்டும் என்றார் நம்பி.
பிறகு ஸ்ரீ ராமானுஜர் நம்பி அவர்கள் சொல்லியதை கேட்டுக்கொண்டு விடைப்பெற்று திருவரங்கம் வந்தார். மிகவும் வலிமையான இந்த மந்திரத்தை பிறரும் தெரிந்துகொண்டு அவர்களும் வீடுபேறு அடைய வேண்டும் என்று நினைத்தார் ராமானுஜர்.
சாதி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் கோயில் முன் கூட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார். அதன்படி மக்கள் ஒன்றுக்குடை ஸ்ரீ ராமானுஜர் கோயில் கோபுரத்தின் மேல் ஏறி அந்த மகா மந்திரத்தை எல்லோரும் கேட்குமாறு உரத்த குரலில் சொல்லி அருளினார்.
திருவரங்கத்தில் இவ்வாறு நடந்த விஷயம் நம்பி அவர்களின் காதுகளுக்கு சென்றது. அதை கேட்ட நம்பி ஸ்ரீ ராமானுஜர் மீது அதீத கோபம் கொண்டார். ஸ்ரீ ராமானுஜரை அழைத்த நம்பி அவர்கள். என் கட்டளையை மீறி மகா மந்திரத்தை எல்லோருக்கும் சொல்லிவிட்டாய்.
இந்தப் பாவத்திற்காக நீ கொடிய நரகத்தில் துன்பப்பட போகிறாய். இப்படிப்பட்ட பாவத்தை ஏன் செய்தாய் என்று கோபத்துடன் கேட்டார். நம்பி அவர்களை வணங்கிய ஸ்ரீ ராமானுஜர். நீங்கள் என் உயிரினும் மேலானவர்கள்.
தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் ராமானுஜர். தங்கள் கண்களுக்கு நான் செய்தது பாவம் என்றால் தண்டனை கொடுங்கள். ஆனால் அந்த பாவத்தால் பலரும் வீடுபேறு அடைய போகிறார்கள்.
அதற்காக நான் ஒருவர் நரகத்தில் துன்பப்படுவது பற்றி எங்கு ஒரு பொழுதும் கவலை என்றார் ஸ்ரீ ராமானுஜர். மேலும், ராமானுஜர் பேசியதை கேட்ட நம்பி மிகவும் மனம் குளிர்ந்து அவரை தழுவிக்கொண்டார்.
பிறர் நலனிற்காக உன்னையே இழக்க துணிந்து விட்டாயே. உன் அருள் ulla ஸ்ரீராமானுஜரை கட்டித் தழுவிக் கொண்ட நம்பி அவர்கள். பிறர் நலம் பெறுவதற்காக உன்னையே இழக்க துணிந்து விட்டாயே. உன் அருள் உள்ளம் என் கோபத்தை தணித்து விட்டது என்று. ஸ்ரீ ராமானுஜரை வாழ்த்திவிட்டு சென்றார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |