தீபாவளியை கொண்டாடும் மாப்பிள்ளை ரங்கநாதர்- சுவாரசிய கதை தெரியுமா
தீபாவளி என்பது இந்துமத பண்டிகைகளில் மிக முக்கியமாக கொண்டாட கூடிய ஒரு பண்டிகையாகும். மேலும் புதிதாக திருமணமான தம்பதியினர் தல தீபாவளி கொண்டாடுவார்கள். அப்படியாக நம்மை போலவே திருவரங்கத்தில் திவ்ய தம்பதியான அரங்கநாதனும் புது மாப்பிள்ளையாக ஒவ்வொரு வருடமும் தீபாவளி கொண்டாடுகிறார். அந்த சுவாரசிய கதையை பற்றி பார்ப்போம்.
ஸ்ரீரங்கனும் பெரியாழ்வாரின் மாப்பிள்ளை தானே. ஆண்டாளை மனம் செய்து கொடுத்த பெரியாழ்வார் அரங்கனின் மாமனார் தானே. வருடந்தோறும் அரங்கன் தீபாவளி கொண்டாடும் விதமே பார்ப்பதற்கு அவ்வளவு அழகை தரும். முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் செய்து மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருள செய்வார்கள்.
மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய் சிகக்காய் தூள் ஆகியவையும் வழங்கப்படும். முந்தைய நாள் இரவு நம்பெருமாளுக்கும், தொடர்ந்து ஆழ்வார், ஆச்சாரியர் சன்னதிகளுக்கு நல்லெண்ணெய் சீகக்காய் தூள், விரலி மஞ்சள் ஆகியவை நம் பெருமாள் சார்பில் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளி அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியர் சன்னதிகளில் எண்ணெய் சாதப்பட்டு திருமஞ்சனம் விழா நடைபெறும். பின்னர் மூலவர் உற்சவருக்கு புத்தாடை மலர் மாலை அலங்கார முடிந்ததும் ஆழ்வார் ஆச்சாரிய உற்சவர்கள் பெரிய சன்னதிக்கு கிழக்கே உள்ள கிளி மண்டபத்தில் பெருமாள் வருகைக்காக காத்திருப்பார்கள்.
அப்பொழுது பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ரங்கநாதருக்காக தீபாவளி சீர் கொடுப்பதற்காக காத்திருப்பார்கள் . அந்த வேலையில் நம்பெருமாள் சந்தனு மண்டபம் எழுந்தருள்வார். அங்கு திருமஞ்சனம் அலங்காரம் முடிந்த பின்பு பெரியாழ்வார் அரங்கனுக்கு தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறும்.
பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்குவர். அதோடு நம் பெருமாளின் திருவடிகளை சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். அந்த வேளையில் வேத பாராயணம், மங்கள வாத்தியம் முழங்க சீர் கொடுக்கப்படும். இதை ஜாலி அலங்காரம் என்பர். அப்படியாக நம் பெருமாளின் இந்த தீபாவளி தரிசனம் காண்பவர்களுக்கு வறுமை நீங்கும்.
குடும்பத்தில் எந்த ஒரு பொருளாதார தட்டுப்பாடும் ஏற்படாது. அதோடு திருமணமாகாதவர்களுக்கு நம் பெருமாளின் அருளால் விரைவில் திருமணம் கைகூடி தலை தீபாவளி கொண்டாட கூடிய அற்புதமான வாய்ப்புகள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







