வரலக்ஷ்மி நோன்பு ஸ்பெஷல்- பூஜை பொருட்களின் சங்கமம் எங்கு உள்ளது தெரியுமா?
பொதுவாக இந்துக்களில் நாம் பூஜை அறைகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அதிலும் குடும்ப பெண்கள் பூஜை அறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து பூஜைக்கு தேவையான பொருட்களை புதிதாக தேடி தேடி வாங்கும் பழக்கம் வைத்திருப்பார்கள்.
மேலும், பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே கடைகளில் கிடைப்பது அரிது. அப்படியாக, சென்னையில் புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் அருகில் அமையப்பெற்று இருக்கும் ஸ்ரீ விஜயா ஸ்டோர்ஸ்க்கு நாம் சென்றால் பூஜைக்கு தேவையான பொருட்கள் தொடங்கி வரலக்ஷ்மி நோன்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் நாம் ஒரே இடத்தில் வாங்கி விடலாம்.
இன்னும் சொல்ல போனால் அந்த கடையே பார்ப்பதற்கு ஓர் கோயில் போல் காட்சி அளிப்பது மனதிற்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாம் இப்பொழுது விஜயா ஸ்டோர்ஸ்க்கு சென்றால் என்ன பொருட்கள் வாங்கலாம், அந்த கடையின் அமைப்புகள் எப்படி இருக்கும், என்று அந்த கடைகளை பற்றி பல்வேறு விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |