சுக்கிரன் சஞ்சாரத்தால் இந்த 4 ராசிகளுக்கு இனி எதிர்பாராத பண மழை தான்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களுடைய மாற்றமும் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒரு வித தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் அவை நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம்.
அப்படியாக, ஜூன் 13 ஆம் தேதி சுக்கிரன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இவ்வாறு சுக்கிரன் தன் சொந்த ராசியில் சஞ்சரிப்பது 4 ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு இந்த காலக்கட்டம் அவர்கள் பொருளாதார ரீதியான ஆசைகளை நிறைவேற்றும். சிலருக்கு வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் ஆசை நிறைவாகும்.
துலாம்:
துலாம் ராசிக்கு சுக்கிரனின் இந்த பரணி நட்சத்திரம் சஞ்சாரம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை வழங்கும். சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அரசாங்க உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
மகரம்:
மகர ராசிகாரர்களுக்கு பரணி நட்சத்திர சஞ்சாரம் வியாபாரத்தில் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். சிலருக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் விலகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்வில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். வாங்கிய கடனை அடைக்கும் பாக்கியம் கிடைக்கும். முகத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குழந்தைகள் வழியே நற்பெயர் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |