2026-ல் சுக்கிரன் பலத்தால் ஆடம்பர வாழ்க்கை வாழப் போகும் 4 ராசிகள்
நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் தான் ஒருவருக்கு காதல், இன்பம், மகிழ்ச்சி, வீடு ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை கொடுக்கக் கூடிய நபராக இருக்கிறார். அப்படியாக 2026 ஜனவரி 12-ம் தேதி முதல் மார்ச் மாதம் இறுதிவரை மூன்று மாதங்களுக்கு மகரம், கும்பம் மற்றும் மீன ராசியில் வலுவான சஞ்சாரத்தை இவர் மேற்கொள்ள போகிறார்.
இதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கங்கள் உண்டாக்கும். அப்படியாக புத்தாண்டு தொடக்கத்திலிருந்து முதல் மூன்று மாதம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஜாக்பாட் யோகம் தான். .இவர்கள் நினைத்ததை வாங்கி வாழக்கூடிய அற்புதமான யோகம் இருக்கிறது அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரமானது இவர்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுக்கப் போகிறது. அதாவது இவர்கள் மனதில் ஒரு பொருளை வாங்க வேண்டும் அல்லது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலே போதும் அது இவர்களுக்கு உடனடியாக நடந்து விடும். கேட்ட பொருட்கள் இவர்களுக்கு கையில் வந்து சேரக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும்.
கன்னி:
கன்னி ராசிக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரமானது இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல வருமானத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. திடீரென்று இவர்களை அலுவலகத்தில் அழைத்து உயர் பதவி அல்லது சம்பள உயர்வை கொடுக்கப் போகிறார்கள். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுத்திக் கொண்டு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட போகிறார்கள். தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய அற்புதமான காலமாகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரமானது இவர்களுக்கு மனதில் இருக்கக்கூடிய கவலைகளை போக்க போகிறது. ஒரு சிலருக்கு காதல் மலரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. காதலர்கள் மற்றும் வாழ்க்கை துணை உடன் இவர்கள் ஒரு மிகச்சிறந்த நேரத்தை செலவிடப் போகிறார்கள். எதிர்பாராத பரிசுகள் இவர்களுக்கு காத்திருக்கிறது வேலையில் இவர்களுக்கு பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைக்கக்கூடிய அற்புதமான மாதமாக இருக்கப் போகிறது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு நீண்ட நாட்களாக இவர்களுக்கு கைகளில் வரக்கூடிய பணம் வந்து சேர போகிறது. இவர்களுடைய மன அழுத்தங்களிலிருந்து இவர்கள் விடுபட போகிறார்கள். அதைவிட முக்கியமாக மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மிக மகிழ்ச்சியான நேரத்தை இவர்கள் செலவிடப் போகிறார்கள். இவர்களுக்கு நெருங்கியவர்களுக்கும் இவர்கள் பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய காலமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |