சுக்கிரன் பெயர்ச்சி: கொட்டும் பண மழை எந்த ராசிகளுக்கு
ஜோதிடத்தில் நவகிரகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதனுடைய இடத்தை மாற்றுகிறது. அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் ஒரு வித தாக்கம் உண்டாகும். அந்த வகையில் நவகிரகங்களின் அசுரர்களின் குருவாக இருக்க கூடியவர் சுக்கிரன்.
இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியாக இருக்கிறார். அப்படியாக, சுக்கிர பகவான் தற்பொழுது குரு பகவானின் சொந்த வீடான மீன ராசியில் பயணம் செய்கிறார். அவர் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைந்தார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய மாற்றமும் பண பலமும் கொடுக்க இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமைய உள்ளது. பலருக்கும் நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேர போகிறது. நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலை தூர பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். திருமணம் கைகூடும். முகத்தில் தெளிவும் சந்தோஷமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிக சிறந்த பலனை கொடுக்க உள்ளது. வாழ்க்கையில் செல்வ செழிப்போடு வாழும் கால கட்டம் இது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். பண தட்டுப்பாடு நிவர்த்தி ஆகும். மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு இந்த சுக்கிரனின் பெயர்ச்சி மனதில் ஒரு வித நேர்மறை எண்ணங்களை கொடுக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். காதல் வாழ்க்கை சுமுகமாக செல்லும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பயணங்கள் வழியாக சில மாறுதல்களை பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |