இன்றைய ராசி பலன்(27-04-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும். மூன்றாம் நபரின் ஆலோசனை கேட்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடாதீர்கள். தடைகள் தாமதம் சந்தித்தாலும் விலகி செல்லும்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு எதிர்ப்பாராத செலவுகளும் சிக்கல்களும் உருவாகும். ஆடம்பர செலவுகள் செய்வதால் மனம் மகிழ்ந்தாலும் சேமிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்கும் நிலை உண்டாகும்.

மிதுனம்:

இன்று மனதில் வீண் சிந்தனைகளை வளர்த்து கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் உண்டாகும். குடும்பத்தில் தாய் தந்தையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டாம்.

கடகம்:

குடும்பத்தில் உறவினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். மனதிற்கு பிடித்த உணவை உண்டு மகிழ்வீர்கள். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவதால் வெற்றிகள் கிடைக்கும்.

மகாபாரதம்: சகுனிக்காக பாண்டவர்களிடம் சண்டையிட்ட கிருஷ்ணர்

மகாபாரதம்: சகுனிக்காக பாண்டவர்களிடம் சண்டையிட்ட கிருஷ்ணர்

சிம்மம்:

வியாபாரம் செய்பவர்கள் இன்று வாடிக்கையாளர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுக்கும். பதட்டம் குறைய இறைவழிபாடு அவசியம்.

கன்னி:

குடும்பத்தில் உங்களால் சில சண்டைகள் உண்டாகும். இன்று முடிந்த அளவிற்கு எந்த ஒரு விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நன்மை கொடுக்கும். மதியம் மேல் நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.

துலாம்:

வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக கைக்கு வரவேண்டிய பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்:

இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி தரும்.

தனுசு: 

இன்று பிள்ளைகளுடன் நல்ல பிணைப்பு உண்டாகும். வீட்டில் உங்களுக்கு சாதகமாக அனைவரும் செயல்படுவார்கள். சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் வரும் ஆபத்துகளை எளிதாக கடந்து விடுவீர்கள்.

மகரம்:

வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். பண நெருக்கடி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்

கும்பம்:

போட்டியாளர்கள் உங்களை விட்டு செல்வார்கள். திருமணம் வரன் எதிர்பார்த்த முறையில் அமையும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களில் லாபம் உண்டாகும். உறவினர்களுடன் கவனமாக பேச வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு நட்புகளை சந்திப்பீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

    

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US