எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற ஞாயிற்று கிழமை சூரிய பகவான் வழிபாடு
ஒவ்வொரு தெய்வங்களை வழிபாடு செய்யவும் ஒவ்வொரு முறை இருக்கிறது.அந்த வகையில் உலகிற்கு வெளிச்சம் கொடுத்து அனைத்து சக்திகளும் பெற்று தருவது சூரிய பகவானின் "ஞாயிறு விரதம்" அல்லது "சூரிய விரதம்"
இந்த விரதம் இருப்பதால் வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்கிறது,இந்த ஞாயிறு விரதம் இருக்கும் முறையும்,அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.
நமக்கு தொல்லை கொடுக்கும் எதிரி யாராக இருந்தாலும் சூரியனைப் போல நின்று எதிரிகளை வென்று விடலாம்.இந்த உலகில் சூரியன் தான் மிகப்பெரிய நட்சத்திரம். இந்த பிரபஞ்சத்துக்கே ஆற்றலைத் தரக்கூடியவர் இவர்தான்.
இவரை வழிபடுபவர்களுக்கு நிச்சயம் போதுமான ஆற்றலைத் தந்து வெற்றி பெறச் செய்வார் சூரிய பகவான். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சூரிய பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில்குளித்து விட வேண்டும்.
பிறகு நாம் பூஜை செய்யும் இடத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அர்ச்சனைக்கு ஒரு தட்டை தயார் செய்து, அதில், கொஞ்சம் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
விளக்கை ஏற்றிக் கொண்டு, அதை சூரியன் உதிக்கும் திசை நோக்கி வைத்து, ஒரு சிறிய சொம்பில் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, அந்த அர்ச்சனைத் தட்டின் மீது தீர்த்தம் போல தெளிக்க வேண்டும்.
பிறகு ஒரு இனிப்பு சாப்பிட்டு இந்த பூஜையை நிறைவு செய்யவேண்டும்.குறிப்பாக, வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பை சாப்பிடலாம். அதன்பின் மாலை வரை தண்ணீர், பால் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.
காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்து மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக, சாப்பிட்டு விட வேண்டும்.
இவ்வாறு சூரிய யாபகவானுக்கு உரிய விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும்.உடலில் தேவை இல்லாத பிரச்சனைகள் தோன்றாது. வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
முகத்தில் நல்ல மாறுதல்களும் நல்ல வசீகரம் உண்டாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து உருவாகும், பொருளாதார வளர்ச்சி அடையும்.
தீய சக்திகள் நம்மை நெருங்காது. தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனாகவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.
அத்தகைய மகத்துவம் வாய்ந்ததுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதம்.ஆதலால் என்ன துன்பம் இருந்தாலும் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |