ஜாதகத்தில் சூரியன் நிலை சரியில்லை என்றால் அவர்கள் சென்று வணங்க வேண்டிய ஆலயம்

By Sakthi Raj Jul 08, 2024 06:06 AM GMT
Report

கிரகங்களின் நாயகன் சூரியன்.கிரகங்களின் ராஜாவான சூரியனுக்கு ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சூரியன் பொதுவாக வேலைகள், தலைமைத்துவ திறன்கள், மரியாதை, புகழ் மற்றும் சமுதாயத்தில் கருணை ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார்.

சூரியன் உலகின் ஆன்மா வடிவமாக கருதப்படுகிறது, இதன் காரணமாக முழு உலகமும் ஆற்றலையும் பலத்தையும் பெறுகிறது.அப்படியாக சூரியன் ஒவ்வொரு ராசியில் ஒவ்வொரு இடத்தில் இருக்க அதற்கான பலனை நமக்கு தருகிறார்.

இப்பொழுது எந்த ராசியில் சூரியன் இருந்தால் எந்த ஆலயம் சென்று வழிபடலாம் என்பதை பற்றி பார்ப்போம்

ஜாதகத்தில் சூரியன் நிலை சரியில்லை என்றால் அவர்கள் சென்று வணங்க வேண்டிய ஆலயம் | Suriya Thisai Suriya Puthi Koyilgal Jothidam

சூரியன் மேஷ ராசியில் இருந்தால் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்,காஞ்சிபுரம் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் மிதுன ராசியில் இருந்தால் தில்லை நடராஜர் கோவில்,சிதம்பரம் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் கடக ராசியில் இருந்தால் சட்டைநாதர் கோயில் – பிரம்மபுரீஸ்வரர்,சீர்காழி சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் சூரியன் சிம்ம ராசியில் இருந்தால் சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் கன்னி ராசியில் இருந்தால் சங்கர நாராயணசாமி கோயில்,சங்கரன் கோவில் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்தால் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரஸ்வாமி கோவில் -திருநள்ளாறு சென்று வழிபட்டு வரவும்.

நாம் தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரங்கள்

நாம் தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரங்கள்


சூரியன் விருச்சிக ராசியில் இருந்தால் காளகத்தீசுவரர் கோயில்-திருகாளஹஸ்தி சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் தனுசு ராசியில் இருந்தால் ஆபத்சகாயேசுவரர் கோயில்–ஆலங்குடி சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் மகர ராசியில் இருந்தால் பட்டீசுவரர் கோயில்-பேரூர்(கோவை) சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் சூரியன் கும்ப ராசியில் இருந்தால் திருநாகேசுவரம்-நாகநாதசுவாமி கோயில் சென்று வழிபட்டு வரவும்.

சூரியன் மீன ராசியில் இருந்தால் இராமநாதசுவாமி திருக்கோவில் -இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வரவும்.

சூரிய தசா மற்றும் சூரிய புத்தி நடப்பவர்கள்,ஜாதகத்தில் சூரியன் நிலை சரியில்லாமல் இருந்தால் இவ்வாலயத்திற்கு சென்று வழிபட்டால் நல்லது நடக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US