சூரியன் பெயர்ச்சி 2025: எந்த 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையப்போகிறது
நவகிரகங்களில் முதன்மையான கிரகமாக விளங்கக்கூடியவர் சூரியபகவான். சூரியன் சித்திரை 14 ஆம் தேதி மேஷத்திற்கு பயணம் செய்தார். அவர் தற்பொழுது மே 15 அதிகாலை 12.20 மணிக்கு சூரியன் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு மாற உள்ளார். சூரியனின் இந்த இடமாற்றம் 5 ராசிகளுக்கு வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான், அவருடைய சஞ்சாரம் சிம்ம ராசிக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தை பெறுவீர்கள். முதலீடுகள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கன்னி:
சூரிய பகவானின் ஆசிர்வாதத்தால், கன்னி ராசிக்காரர்கள் வேலையில் மிக பெரிய வெற்றியையும் மாற்றத்தையும் பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் விரும்பிய நிறுவனத்தில் உங்களுக்கான வேலை கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிக சிறந்த நல்ல வாய்ப்புகளை தேடிக்கொடுக்கும். வேலை மற்றும் தொழில் இவை இரண்டிலும் நல்ல மாற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். வண்டி வாகனம் யோகம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் அவர்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் கைகளுக்கு வந்து சேரும். வருமானம் சிறப்பாக அமையும். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் சூரிய பகவானின் ஆசிர்வாதத்தால் மிக பெரிய முன்னேற்றம் அடைய உள்ளார்கள். கடன் தொல்லைகள் விலகும். சிலருக்கு புதிய சொத்துக்கள் நிலம் இடம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலம் சிறப்பாக அமையும். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |