வெள்ளிக்கிழமையில் துளசிக்கு பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் துளசி செடி மிகவும் தெய்வீகமாக போற்றி வழிபாடு செய்யும் செடியாகும். மேலும், ஒருவர் தொடர்ந்து துளசி செடியை பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் எண்ணற்ற நன்மைகள் நடக்கிறது.
அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் துளசிக்கு பூஜை செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்களை பெறலாம் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் விஷேசமான நாளாக பார்க்கப்படுகிறது.
மேலும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள். அன்றைய தினம் நம் வீடுகளில் சில எளிய பரிகாரங்கள் செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, துளசி செடியை வெள்ளிக்கிழமை வழிபடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.
காரணம், துளசி செடியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால், வெள்ளிக்கிழமை துளசிக்கு பால், தண்ணீர் ஊற்றுவது, துளசி மாடம் அருகில் விளக்கேற்றுவது, துளசி மந்திரம் சொல்வது போன்ற பரிகாரங்களைச் செய்வது நமக்கு நன்மை தருகிறது.
இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள வறுமை விலகி, பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை பெரும் என்கிறார்கள். மேலும், துளசி செடிகளுக்கு வெள்ளிக்கிழமையில் பூஜைகள் செய்து துளசி துதி பாடி வழிபாடு செய்தால் காரிய தடைகள் எதுவும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை துளசி செடி அருகில் விளக்கு ஏற்ற வேண்டும். கூடவே, கற்பூர ஆரத்தி எடுத்து, அந்த வெளிச்சத்தை வீடு முழுவதும் காட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகுவதோடு, கெட்ட சக்திகள் வெளியேறும்.
மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். மேலும், வெள்ளிக்கிழமை துளசி செடிக்கு பால் ஊற்றும் போது, "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:" என்ற மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்லி பூஜை செய்து வழிபாடு செய்யும் பொழுது லட்சுமி தேவியின் முழு அருளை பெறலாம் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |