சூரியனின் நட்சத்திர மாற்றம்- 2026ல் கட்டாயம் இவர்களுக்கு இது நடந்தே தீருமாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய இடத்தை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கிரகங்களில் தலைவராக இருக்க கூடியவர் சூரிய பகவான். அப்படியாக, நவம்பர் 19, 2025 ஆம் ஆண்டு சூரியன் அனுஷ நட்சத்திரத்திற்கு நுழைகிறார். அங்கு சூரிய பகவான் டிசம்பர் 2 ஆம் தேதி வரை இருக்கிறார்.
தற்பொழுது சூரிய பகவான் விசாக நட்சத்திரத்தில் இருக்கிறார். இவ்வாறு சூரிய பகவான் தங்களுடைய நட்சத்திரத்தை மாற்றும் பொழுது சில ராசிகளுக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும். அவை சமயங்களில் எதிர்மறை மற்றும் நேர்மறை தாக்கங்களை உண்டாக்கும். அப்படியாக, சூரியனின் இடமற்றதால் 2026ல் எந்த ராசியினர் மிக பெரிய மாற்றத்தை பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியினர் அவர்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் நடக்க உள்ளது. சிலருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் முடியும். முன்னோர்கள் வழியே உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிகளுக்கு சூரியனின் இட மாற்றம் அவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று கொடுக்க போகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் விலகி நிம்மதி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள். சிலருக்கு வண்டி வாகனம் மாற்றும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிகளுக்கு இந்த சூரியனின் இடமாற்றம் அவர்களுக்கு வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. சமுதாயத்தில் இவர்களுக்கான மதிப்பு உயரும். வாழ்க்கை துணை அவர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல உயரத்தை தொடுவார்கள். நீங்கள் நினைத்த இடத்தில் பணம் கிடைக்கும். வங்கி ரீதியாக சந்தித்த வந்த பிரச்சனைகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |