இந்த 3 ராசியில் பிறந்த பெண்களை ஏமாற்றவே முடியாதாம்- யார் தெரியுமா?
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணங்களை பெற்றிருப்பார்கள். ஒரு சில மனிதர்கள் யார் என்ன சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்க்காமல் நம்பி விடுவார்கள். ஆனால் ஒரு சிலரிடம் நாம் என்னதான் உண்மையை சொன்னாலும் அவர்கள் தீவிரமான ஆராய்ச்சிக்குப் பிறகு அவர்கள் அந்த விஷயத்தை நம்ப தொடங்குவார்கள்.
இதற்கு அவர்களுடைய ராசி அமைப்புகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தெளிவான சிந்தனைகளோடு இருப்பார்களாம். இவர்களை நாம் தலைகீழ் நின்றாலும் ஏமாற்ற முடியாது என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்த அன்பர்கள் எப்பொழுதும் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமான ஒரு தேடுதலுக்கு பிறகே அவர்கள் ஒரு முடிவுக்கு வரக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படியாக மிதுன ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தெளிவான சிந்தனைகளோடும் விழிப்புணர்வுகளோடும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இவர்களை நாம் அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் எல்லா விஷயங்களையும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடியவர்கள். ஆதலால் இவர்கள் ஒரு விஷயத்தை இயல்பாகவே ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இவர்களிடம் நாம் ஒரு விஷயத்தை நம்ப வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் இவர்களாக ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாம் அவர்களை சமாதானம் செய்ய முடியுமே தவிர்த்து இவர்களை ஏமாற்றுவது என்பது நடக்காத ஒரு காரியமாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் ஒரு சந்தேக பார்வையில் பார்க்க கூடிய நபராக இருக்கிறார்கள். அதாவது இவர்கள் எப்பொழுதும் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வோடு செயல்படக்கூடியவர்கள். ஆதலால் இவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை முதலில் சந்தேக கண்ணோட்டத்தில் பார்த்து பிறகு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரக்கூடியவர்கள். இவர்களிடம் நாம் வாதாடுவது என்பது தோல்வியில் தான் முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |