பால ராமரின் மீது சூரிய திலகம்: அதிசய நிகழ்வின் வீடியோ காட்சிகள்
இன்று நாடு முழுவதும் ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
இன்று ராம நவமி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதற்காக அயோத்தி ராமர் கோயில் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு எல்இடி விளக்குகள் கொண்ட பெரிய திரைகள் வைக்கப்பட்டன.
பக்தர்கள் ராமர் கோயிலில் நடக்கும் பூஜைகளை நேரடியாக காணலாம் என கூறப்பட்டது. பால ராமரின் மீது சூரிய திலகம் விழும் அற்புத காட்சிகள் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
இன்று 12.16 மணிக்கு தொடங்கி 12.21 மணிவரை இந்நிகழ்வு நீடித்தது. இந்நிகழ்வின் போது பக்தர்கள் ராம ராம கோஷம் எழுப்பினர், இக்காட்சிகள் வெளியாகி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
भए प्रगट कृपाला " जय श्री राम " ❣️ pic.twitter.com/8Jk5r6lJL6
— Ayodhya Darshan (@ShriAyodhya_) April 17, 2024