இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யும் பையனுக்கு ராஜயோகம் காத்திருக்கிறதாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் உள்ளது. அப்படியாக, குறிப்பிட்ட சில நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது கணவருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த பெண்ணின் நட்சத்திரம் என்னவென்று பார்ப்போம்.
சுவாதி நட்சத்திரம்:
ஜோதிடத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண் மிகவும் கொடுத்து வைத்தவர். அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் மென்மையான, அமைதியான, சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண்கள் ஆவார்கள்.
அதோடு, இவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் அவர்களின் கணவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் தங்களின் கணவரை அதிகம் விரும்பும் நபராக இருப்பார்கள்.
அதோடு, கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். தங்கள் குடும்பத்திற்காகவும் கணவருக்காகவும் அடிக்கடி கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். மிக முக்கியமாக இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிறரை புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள்.
ஆதலால், இவர்கள் தன் கணவரின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அவர்கள் தேவையை பூர்த்தி செய்வதில் அக்கறையாக இருப்பார்கள். மேலும், இவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். பொதுவாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நட்பாக வைத்திருந்தாலே நல்ல அதிர்வலை உருவாகுவதை காணலாம்.
அதிலும் இவர்கள் மனைவியாக வரும் பொழுது அந்த கணவருக்கு இவர்களால் பெரிய முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் உருவாகிறது என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |