குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடை வருகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்

By Sakthi Raj Mar 15, 2026 01:00 PM GMT
Report

ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் குலதெய்வம் மிகவும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக நாம் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து அதன்படி நடந்து விட்டால் கட்டாயம் நமக்கு நம் முன்னோர்களின் அருளும் குலதெய்வத்தின் அருளும் இருப்பதின் அறிகுறியாகும்.

ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் முயற்சி செய்தாலும் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். அவ்வாறு தடை ஏற்படுகிறது என்றால் அவை முன்னோர்கள் நம் மீது ஏதேனும் வருத்தத்தில் இருப்பதையும் குலதெய்வம் நம் மீது கோபமாக இருப்பதையும் உணர்த்துவதாக சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடை வருகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம் | Symptoms Ancestors Is Angry On Our Family 

சனியின் வக்ர பெயர்ச்சி: உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்.. யார் தெரியுமா?

சனியின் வக்ர பெயர்ச்சி: உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்.. யார் தெரியுமா?

அதேபோல் நம்முடைய வீடுகளில் துளசி, வாழை, மருதாணி இந்த மூன்று புனிதமான செடிகளும் செழிப்பாக வளர்ந்தால் நம்முடைய வீடுகளில் முன்னோர்களின் அருள் இருப்பதை அவை உணர்த்துகிறது. ஆனால் இந்த மூன்றும் காய்ந்து வாடிப்போனால் அவை பித்ருக்கள் நம் மீது கோபமாக இருப்பதை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது.

அதைப்போல் பித்ருக்களின் சாபம் இருக்கிறது என்றால் குடும்பத்தில் பெண் பிள்ளைகளின் வாழ்க்கை எப்பொழுதும் கேள்விக்குறியாகவே இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் செய்யும்பொழுது அதில் தடை தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

அப்பொழுது நாம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி காரியங்களை சரியாக செய்யவேண்டும். அதேபோல் திருமணம் ஆகி அந்த குடும்பத்தில் நீண்ட நாட்கள் குழந்தை பிறப்பதில் தாமதம் இருக்கும்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடை வருகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம் | Symptoms Ancestors Is Angry On Our Family

தவறியும் இந்த 8 விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

தவறியும் இந்த 8 விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

இதுவும் நமக்கு முன்னோர்கள் நம் மீது கோபமாக இருப்பது உணர்த்துவது ஆகும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் நாம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் சடங்குகளை சரியாக செய்து விட வேண்டும்.

அதோடு முன்னோர்கள் பெயரில் அன்னதானம் வழங்க வேண்டும். தினமும் காலையில் காகம் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும். முன்னோர்களை எப்பொழுதும் மனதார நினைத்து அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கட்டாயம் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US