இவை தான் ஒருவர் ஞானமடைய போகிறார் என்பதற்கான அறிகுறி
ஞானம் இதில் தான் உலகம் அடங்கி இருக்கிறது.உலகத்தில் மனிதன் பிறந்து எத்தனை பெரிய சாதனைகள் செய்தாலும் அவை அவனுடைய பிறப்பின் கடமை என்று ஆகிறது.
ஆனால் அவனிடம் போதுமான ஞானம் இல்லை என்றால் அவன் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்தாலும் பயன் இல்லை. தற்போதைய காலத்தில் தெளிவின்மை என்பது எல்லோரிடத்தில் பொதுவான வியாதியாக இருக்கிறது.
அதாவது சரியான முடிவு எடுப்பதில் தொடங்கி,வாழ்க்கையை ஏற்று கொள்ளும் பக்குவம் வரை எல்லோருக்கும் ஒரு மருத்து சாப்பிடுவது போல் ஆகிவிட்டது.
அதாவது எல்லாவற்றுக்கும் பிறருடைய துணை,பிறருடைய வழிநடத்தல் என்று எப்பொழுதும் எல்லாவற்றிக்கும் பிறரை எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர்.வாழ்க்கையில் குரு என்பது அவசியம் ஆனால் குருவால் நம் வாழ்க்கையை வாழ முடியாது.
அப்படியாக இப்படி இருந்தால் இதை செய்ய, இதை எடுத்த சொல்ல நமக்கு போதுமான சுற்று வட்டாரம் இருக்கிறது நாம் ஏன் சுயமாக சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் வந்து விடும்.பிறகு அவன் எங்கு இருந்து ஞானம் என்ற ஆன்மீகத்தை அடைந்து ஆன்மாவை மேம்படுவது.
ஞானம் அடைவது என்றால் என்ன?ஒரு மனிதனுக்கு ஞானத்தின் ஏன் அவசியம்?ஒருவர் ஞானத்தின் வழி செல்கின்றார் என்பதற்கான அறிகுறி என்ன என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
மனிதன் பிறந்து அவன் கடமைகளை புரிந்து அதை செய்ய தொடங்குவதிலு இருந்தே அவனுடைய ஞானம் பிறந்து விடுகிறது.
உதாரணமாக ஒருவர் ஒரு தோட்டத்தை நெருங்க நெருங்க எவ்வாறு அதன் சீதோசன நிலையை உணர்வாரோ அவர் தோட்டத்தில் உள்ள அந்த மலர்களின் நறுமணத்தையும் முகர முடியுமோ அதுபோலவே ஞானம் அடைவதை நெருங்கிச் செல்லும்போது உள்ளார்ந்த புரட்சிக்கு அருகில் செல்லும் போது நமக்கு சில தரிசனங்கள் கிடைக்கும்.
அதாவது ஞானம் பிறக்கிறது என்றால் பிறப்பின் பயன் புரியவருகிறது என்று பொருள்.ஆக அவன் செய்த காரியம் அதன் வினை பயன் எல்லாம் கர்மாவின் விதி என்ற உணர்தல் ஏற்படும்.
அப்படியாக நேற்று வரை நமக்குள் எவை எல்லாம் மிக பெரிய துன்பம் என்று கருத்தினார்களோ அந்த சங்கடம் எல்லாம் படி படியாக குறையும்.
அடுத்ததாக மனிதனுக்கு ஏற்படவே கூடாது என்ற விஷயங்களில் ஒன்று கோபம்.நேற்று வரை மனதிற்குள் இருந்த கோபம் குறையும்.
தேவை இல்லாத மற்றும் புரிதல் இல்லாத வெறுப்புணர்வு மறைய ஆரம்பிக்கும். நான் தான் என்ற கர்வம் நேற்று வரை மனதில் பாறையாக இருந்த ஆணவத்தின் பாரம் குறையும்.காரணமே இல்லாத மனதில் ஓடி கொண்டு இருக்கும் வேதனையின் அளவு குறையும்.
அடக்கமுடியாமல் சிரமப்பட்ட ஆசைகள் மறையும். இவ்வை எல்லாம் மறைந்து குறைய நாம் என்ற பிறப்பின் அழகான புரிதல் பிறகும்.இவை தான் ஞானம் அடைய போகின்றோம் என்பதற்கான அறிகுறி.
மண்ணில் பிறந்த பலரும் இந்த ஞானம் என்ற பிறப்பின் ரகசியம் அறியாமலே இறந்து விடுகின்றனர்.ஆக வாழ்வது என்பது பிறருக்காக இல்ல.
நமக்காக.நம்முடைய ஆன்மாவிற்காக. வாழும் சிறிது காலத்தில் தேவை இல்லாத விஷயங்களை கொண்டு ஆன்மாவை துன்புறுத்தாமல் பூ போல் மென்மையாக நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் அனுசரித்து இறைவனை ஒரு நாள் சரண் அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |