இந்த அறிகுறிகள் இருந்தால் வீடுகளில் நிச்சயம் தெய்வம் வாசம் செய்வதாக அர்த்தமாம்
எல்லா இடங்களில் தெய்வம் வாசம் செய்வது இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் வீடுகளில் கடவுள் நாம் அழைக்காமல் நம்முடன் இருந்து உதவி செய்வதை பார்க்கலாம். அதற்கு அந்த குடும்பம் செய்த புண்ணியமே காரணமாகும்.
அந்த வகையில் நம்முடைய வீடுகளில் தெய்வம் இருப்பதற்கான சில அறிகுறிகளைப் வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இஷ்ட தெய்வம், குலதெய்வம் என வீடுகளில் நம்முடன் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான அறிகுறிகளை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடுகளில் பூஜை செய்த பிறகு அல்லது கோவில் வழிபாடுகளில் கலந்துகொண்டு திரும்பும்போது நமக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சமயங்களில் நாம் எதிர்பார்த்து வேண்டிய காரியங்களுக்கான பதிலாகஇருக்கலாம்.
அல்லது ஏதேனும் நம் மனதை மகிழ்ச்சியப்படுத்தக்கூடிய செய்திகள் நம்மை வந்து சேரும். இவ்வாறு நடப்பது நமக்கு தெய்வம் துணை நிற்பதையும் நம்முடன் நம் வீடுகளில் இருப்பதையும் அவை உணர்த்துகிறது. அதை போல் வீடுகளில் திடீரென்று நறுமணம் வீசுவதை நாம் காணலாம்.
அதாவது சில நேரங்களில் சந்தனம், விபூதி, பூக்கள் என்றுநல்ல வாசனையை நாம் உணர முடியும். இவ்வாறு இருப்பது நம் வீடுகளில் தெய்வ நட மாற்றம் இருப்பதை உணர்த்தும் ஒரு அறிகுறிகள் ஆகும். நாம் ஏதேனும் ஒரு சில கஷ்டங்களில் இருந்து தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் நெருங்கிய சொந்தங்கள், நெருங்கி நண்பர்கள் கூட உதவாமல் போயிருக்கலாம்.
ஆனால் எங்கிருந்தோ முகம் தெரியாத நபர் நம்மை தேடி வந்து நமக்கு உதவிசெய்வார்கள். இவ்வாறான விஷயங்களும் நமக்கு தெய்வத்தின் துணை இருப்பதை உணர்த்துகிறது. மேலும் நாம் ஒரு சில இடங்களுக்கு கிளம்பும் பொழுது ஏதேனும் தடைகள் அல்லது சில கஷ்டங்கள் நடக்கப் போகிறது என்றால் நம்மை அந்த இடத்திற்கு போக விடாமல் தெய்வம் உடன் இருந்து தடுக்கும்.
அதாவது கிளம்பும் பொழுது நிலை வாசலை தாண்டுவதற்கு முன் நாம் சில தடைகளை பார்க்க முடியும் கீழே விழுதல் அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் முட்டிக் கொள்ளுதல் அல்லது நம்முடைய ஆடை ஏதேனும் ஒரு இடங்களில் மாட்டிக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் நம்மை அந்த இடத்திற்குசெல்ல விடமால் தடுக்கும்.
இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறீர்கள் என்றால் முற்றிலும் தெய்வம் உங்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆக துன்ப காலங்களில் துவண்டு போகாதீர்கள். இவ்வாறான அறிகுறிகளால் தெய்வம் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







