கடவுளிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறுவதற்கான அறிகுறிகள்
நம்முடைய மனம் சஞ்சலம் அடையும் வேளையில் எல்லாம் நாம் கட்டாயம் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்து,நம் வேண்டுதல்களை வைப்போம்.மேலும்,நாம் மனம் உருகி வைக்கும் வேண்டுதலுக்கு எப்பொழுதும் சக்திகள் அதிகம்.
அதற்கு உடனே இறைவன் பதில் அளிப்பார் என்பது நம்பிக்கை.அப்படியாக,நம்முடைய வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்த்து விட்டார் என்பாதற்கான சில முக்கிய அறிகுறைகளை நாம் கோயிலை விட்டு வெளியே வரும் முன் காணமுடியும்.அதை பற்றி பார்ப்போம்.
சிலருக்கு இறைவழிபாடு செய்யும் பொழுது அவர்களை அறியாமல் கண்கள் கலங்குவதை பார்க்கலாம்.அவ்வாறு கண்களில் நீர் வழிந்து செய்யும் வேண்டுதலுக்கு அதிக பலன் உண்டு.
அதே போல் சில முக்கியமான வேண்டுதல் வைக்க,அதற்கு உடனே பதில் அளிக்கும் விதமாக பல்லி சத்தமிடுவதை காணலாம்.அவ்வாறு பல்லி சத்தம் இடுவது நல்ல சகுனமாக பார்க்க படுகிறது.
சிலர் வழிபாடு செய்து முடித்து வரும் பொழுது குழந்தை அழுவதை காணலாம்.அவ்வாறு நீங்கள் காண நேரிட்டால் கடவுள் உங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டார் என்று அர்த்தம்.இருந்தாலும் சிலர் குழந்தை அழுவதை தவறாக எண்ணிவிடுகின்றனர்.
மேலும்,கோயிலில் நாம் வேண்டுதல் வைத்து சரியாக திரும்பும் வேளையில் மணி ஓசை கேட்கும்.அவ்வாறு மணி ஓசை கேட்பது மிக சிறந்த பலனாக பார்க்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |