பிறந்தது தமிழ் புத்தாண்டு.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

By Yashini Apr 14, 2025 03:20 PM GMT
Report

தமிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.

அந்தவகையில், ஏப்ரல் 14ஆம் திகதி அதாவது இன்று தமிழ் புத்தாண்டு பிறந்தது. இதை சித்திரை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று பிறந்துள்ள தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.  

பிறந்தது தமிழ் புத்தாண்டு.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? | Tamil New Year Rasipalan 2025

மேஷம்

இந்த தமிழ் புத்தாண்டு வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ராகு பெயர்ச்சிகள் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. வேலையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ரிஷபம்

இந்த தமிழ் புத்தாண்டில் இருந்து வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். தொழில் வளர்ச்சி சாதகமாக அமையும். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடி வரும். முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

மிதுனம்

தொழில், கல்வி, நிதி, உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு வழிவகுக்கும். வெற்றிக்கான ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் முடிவு எடுக்கும் போது சற்று நிதானம் தேவை. முதலீடு விஷயங்களில் கவனமாக செயல்படவும்.

கடகம்

இந்த தமிழ் புத்தாண்டு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் நேர்மறையான மாற்றத்தைக் குறிக்கிறது. ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.

சிம்மம்

வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டுவரும். நிதி ஆதாயங்கள் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுகளும், சுயமரியாதையும் கிடைக்கும்.

கன்னி

தமிழ் புத்தாண்டு சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது. பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

காதல் மற்றும் குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சிலர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். இதனால் அலைச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

விருச்சிகம்

இந்த தமிழ் புத்தாண்டு கலவையான ஆண்டாக இருக்கும். தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். எதிர்பாராத பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய பொறுப்புகள் உங்களை தேடிவரும்.

தனுசு

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இந்த புத்தாண்டு முதல் உருவாகும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மகரம்

நிதானமும், பொறுமையும் தேவை. இந்த புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். தொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இந்த தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஆதரவான உறவுகள் மூலம் ஊக்குவிக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்

தமிழ் புத்தாண்டு கலவையான பலன்களை கொடுக்கப்போகிறது. சனி பகவானின் ஆதிக்கத்தால் நிதி சவால்கள் ஏற்படலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US