2026 ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீருமாம்

By Sakthi Raj Mar 17, 2026 05:32 AM GMT
Report

மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் மிகவும் உயர்வானதாக கருதக்கூடிய அவதாரம் ஸ்ரீ ராம அவதாரமாகும். அதாவது தெய்வம் மனிதராக அவதரித்து நல்ல தலைவனாக நண்பனாக எப்படி தர்மத்தின்வழியே வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ராம அவதாரம் உள்ளது.

அதாவது தெய்வமாகவே இருந்தாலும் மனித அவதாரம் என்று எடுத்து விட்டால் அவர்கள் கட்டாயம் நிறைய துன்பங்களையும் சோதனைகளையும் கடந்த ஆக வேண்டும் என்பதை நமக்கு ஸ்ரீ ராம அவதாரம் தெளிவாக உணர்த்துகிறது.

அப்படியாக மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராம அவதாரம் சைத்ர மாதம் எனப்படும் பங்குனி மாதம் வளர்பிறையில் வரும் ஒன்பதாவது திதியான நவமிக்கதியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் என புராணங்கள் சொல்கிறது.

2026 ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீருமாம் | When Is 2026 Rama Navami And How To Worship

இன்றைய ராசி பலன் (17-03-2026)

இன்றைய ராசி பலன் (17-03-2026)

ஸ்ரீ ராமர் அவதரித்த அந்த நாளை நாம் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடுகின்றோம். சைத்ர நவராத்திரியில் இறுதி நாளாக ஸ்ரீ ராமநவமி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராம நவமி பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு செய்யும் பொழுது நாம் நினைத்த காரியத்தை செய்யக்கூடிய வலிமையை ஸ்ரீ ராமர் நமக்கு கொடுப்பார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

ஸ்ரீ ராம நவமி எப்பொழுது:

ஸ்ரீராம நவமி 2026 தேதி - மார்ச் 27 வெள்ளி

நவமி திதி துவக்கம் - மார்ச் 26 பகல் 02.57

நவமி திதி நிறைவு - மார்ச் 27 பகல் 12.53

புனர்பூசம் நட்சத்திரம் துவக்கம் - மார்ச் 26 இரவு 07.06

புனர்பூசம் நட்சத்திரம் நிறைவு - மார்ச் 27 மாலை 05.48

ஸ்ரீராம நவமி வழிபாட்டு நேரம் - மார்ச் 27 காலை 06.30 - 07.43

2026 ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீருமாம் | When Is 2026 Rama Navami And How To Worship

மேலும் இரண்டு நாட்கள் ராம நவமி திதி இருப்பதால் எந்த நாளில் ஸ்ரீ ராம நவமையை கொண்டாடுவது என பலருக்கும் குழப்பம் இருக்கிறது. அந்த வகையில் மார்ச் 27 ஆம் தேதி அன்று சூரியன் உதயத்திற்கு முன்புதான் நவமி திதி உள்ளது.

அதே போல் ராமர் அவதரித்ததாக சொல்லப்படும் புனர்பூசம் நட்சத்திரமும் மார்ச் 27ம் தேதியன்று தான் வருகிறது. அதனால் மார்ச் 27ம் தேதியையே ஸ்ரீராம நவமி நாளாக கருதி, நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடையா? காரணம் இதுவாக இருக்கலாம்

குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடையா? காரணம் இதுவாக இருக்கலாம்

விரதம் இருக்கும் முறை:

ஸ்ரீ ராமநவமி அன்று அதிகாலை எழுந்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் எளிதான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

2026 ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீருமாம் | When Is 2026 Rama Navami And How To Worship 

அன்று நாள் முழுவதும் ஸ்ரீ ராமர் மந்திரங்களை பாராயணம் செய்வது "ஸ்ரீ ராம ஜெயம்" என்று மந்திரத்தை எழுதுவதும் மிகச் சிறந்த பலன் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் அன்றைய நாள் இராமாயணம் படிப்பதும் ஸ்ரீ ராமரின் பெருமைகளை பேசுவதும் அவரின் நாமங்கள் கேட்பது உச்சரிப்பதும் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் செய்யும்.

ஸ்ரீ ராமபிரானுக்கு மிகவும் பிடித்தமான அவல், பாயாசம், நீர் மோர் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம். முடிந்தவர்கள் ஸ்ரீ ராமர் சீதை திருக்கல்யாணம் நடைபெறும் ஆலயங்களில் கலந்து கொள்ளலாம். பிறகு மறுநாள் காலை ராமருக்கு பூஜை செய்து வழிபாடு செய்துவிட்டு ஸ்ரீ ராம நாமம் நிறைவு செய்யலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US