இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களின் அம்மாவை போல் அப்படியே இருப்பார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பதும் முக்கியமான ஒன்றாகும். இந்த எண் கணிதம் கொண்டும் நாம் பல விஷயங்களை கணித்து தெரிந்துக் கொள்ளலாம். அப்படியாக, பெண்கள் இந்த எண்களில் பிறந்து இருந்தால் அவர்கள் அம்மாவைப் போல் அன்பு, பாசம், மென்மை போன்ற எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருப்பார்களாம்.
அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம். முதலில் நமக்கான ரேடிக்ஸ் எண் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது தாங்கள் பிறந்த தேதி 22 என்றால் உங்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆகும்.
அப்படியாக, எந்த எண்ணில் பிறந்த பெண்கள் அவர்களின் தாய் பேச்சை மீறாதவர்களாகவும், அவர்களின் பேச்சை கேட்டு நடப்பவராகவும் இருப்பார்கள் என்று பார்ப்போம்.
நமக்கு இயல்பாகவே நம் பெற்றோர்களின் குண நலன்கள் இருக்கும் என்றாலும், பெண்களிடம் அவர்கள் தாயின் குணத்தை அப்படியே நாம் கவனிக்கலாம். அதாவது அவர்களை அறியாமல் அவர்கள் தாயின் குணம் அவர்களிடம் அப்படியே அமையப் பெற்று இருக்கும்.
அப்படியாக, எந்த மாதத்திலும் 2, 4, 13, 22, 11, 7,16, ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் அப்படியே அவர்களின் தாயின் குண நலன்களை பெற்று இருப்பார்களாம். இவர்களிடம் அவர்கள் தாயின் ஆளுமை திறனை பார்க்கமுடியும்.
அவர்கள் தாயிடம் உள்ள அன்பு, பாசம், மென்மை இவை அனைத்தும் பார்க்கலாம் என்கிறார்கள். மேலும், இவர்கள் ஒரு விஷயத்தை எவ்வாறு சமாளிக்கிறார்கள், எவ்வாறு ஒருவரிடம் பழகுகிறார் என்பது அவரின் தாயைப் போல் அப்படியே அந்த பெண்ணிடம் இருப்பதையும் பார்க்கலாம் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |