தமிழ்நாட்டில் அதிகம் கோயில்கள் கொண்ட மாவட்டம் எது தெரியுமா?
தமிழ்நாடு ஒரு ஆன்மீக பூமி.அப்படியாக தமிழ்நாட்டை சுற்றிலும் பல இடங்களில் பல்வேறு கோயில்கள் இருக்கிறது.ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு சிறப்புகள் வரலாறுகள் கொண்டதாக அமைய பெற்று இருக்கும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் கோயில் கொண்ட மாவட்டம் ஒன்று இருக்கிறது.அந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 66000 கோயில் அமைய பெற்று இருக்கிறது.இப்பொழுது அது எந்த மாவட்டம் அந்த மாவட்டத்தில் அமைந்து உள்ள கோயில்களின் எண்ணிக்கையை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் அனைவராலும் அறியப்பட்ட மாவட்டம்.இந்த மாவட்டம் தான் பட்டுக்கும் கோயில்களுக்கும் மிகவும் பிரபலம்.காஞ்சிபுரத்தில் பிறந்த மற்றும் வாழும் மக்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள் என்றே சொல்லலாம்.
ஏனென்றால் இந்த மாவட்டத்தில் தான் அதிக அளவில் கோயில் அமைந்து இருக்கிறது. இந்த மாவட்டத்தில் அமைந்து உள்ள கோயில்கள் பட்டியல் பற்றி பார்ப்போம்.
1. சிவன் கோயில் மட்டும் : 16000.
2. அம்பிகைக்குரிய சக்திகள் வீற்றிருந்தருளும் பாதுகாவலையுடைய கோயில்கள் : 5000.
3. பெருமாள் கோயில் : 12000.
4. பிரம்மன் கோயில் : 10700.
5. அருக தேவன் கோயில் : 9700.
6. புத்தேவன் கோயில் : 8000.
7. கொற்றவை கோயில் : 1000
8. பைரவர் கோயில்: 1000.
9. சாத்தன் கோயில்: 1000.
10. முருகனுக்கு : 500.
11. விநாயகருக்கு : 500.
12. சூரியனுக்கு : 500.
13. ஆதிஷேன் : 100.
போன்ற கோயில்கள் அக்காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்தது என்று கச்சியப்ப முனிவர் தனது பாடலில் குறிப்பிடுகிறார்.
பொதுவாக நாம் கும்பகோணம் தான் கோயில் நகரம் என்று நினைத்து கொண்டு இருந்தோம்.ஆனால் கும்பகோணத்தை மிஞ்சி காஞ்சிபுரம் கோயில்கள் பட்டியலில் அதிகம் இடம் பிடித்திருப்பது நம் தமிழ் நாட்டின் பெருமையை குறிக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |